அக்டோபர் 26, 2014

குறளின் குரல் - 920

26th Oct 2014

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
                    (குறள் 914: வரைவில் மகளிர் அதிகாரம்)

பொருட் - செல்வப் பொருளாம்
பொருளார் - பொருள்களிலேயே நாட்டம் கொண்ட விலைமாதரால் கிடைக்கும்
புன்னலந் - அற்ப இன்பத்தினில்
தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார்
அருட்பொருள் - உயர் பொருளாகிய அருளையே அருஞ்செல்வமாகக் கருதி
ஆயும் - அதை அடையும் வழியை ஆராயும்
அறிவினவர் - அறிவுடையோர்

உலகத்தில் நிலையற்ற இன்பங்களைத் தரும் செல்வத்திலேயே நாட்டம்கொண்டு இன்பத்தை விலைகூறும் பெண்டிர் தரும் அற்ப இன்பத்திலே தம்மை இழந்து ஈடுபடார், உயர் பொருளாகிய அருட்செல்வத்தை அருஞ்செல்வமாகப் போற்றும், அதை அடையும் வழியே ஆராயும் அறிவுடைய ஆன்றோர், என்கிறது இக்குறள்.

நாலடியார் பாடலொன்று, “மாணோக்கின் தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே செந்நெறிச் சேர்த்துமென் பார்" என்பதும் இக்கருத்தையொட்டியே.

Transliteration:
poruTporuLAr punnalam thOyAr aruTporuL
Ayum aRivi navar

poruT – the wealth of worldly pleasures
poruLAr – women that are only interested in them and sell themselves for such wealth
punnalam – the cheap pleasure they offer
thOyAr – will not immerse themselves in such pleasures
aruTporuL – the higher wealth of virtues and mind development towards such
Ayum - exploring
aRivinavar – wise men

Wise men that seek higher purpose of life and virtues that direct them towards such puritan pursuits, shall not get drawn to women that seek wealth of worldly pleasures and are even prepared to sell themselves in that pursuit, says this verse. A simple verse which says who will not get succumbed to the designs of women that would do anything for their wealth seeking pursuits.

Wise men that are in the pursuit of higher purpose of life in the world
shall not be drawn to the women that are in “sell self for any” mold”

இன்றெனது குறள்(கள்):

அருள்வேண்டி ஆய்தமர்ந்த ஆன்றோர் அமையார்
பொருளுக்காய் புன்செய்பெண் ணோடு

aruLvENDi Aydamarnda AnROR amaiyAr
poruLukkAi punseypeN NODu

செல்வமே போற்றும் பரத்தைகூடார் நல்லருள்
செல்வமாய்ந்த நல்லறி வோர்

selvamE pORRum paraththaikUDAr nallaruL

selvamAinda nallaRi vOr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...