அக்டோபர் 25, 2014

குறளின் குரல் - 919

25th Oct 2014

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
                                           (குறள் 913: வரைவில் மகளிர் அதிகாரம் )

பொருட்பெண்டிர் - ஒருவரை விரும்பாது, அவர்தரும் பொருள்மேலே நாட்டம் கொண்ட விலைமாதர்
பொய்ம்மை - பாசாங்கான
முயக்கம் - தழுவலும், அணைப்பும்
இருட்டறையில் - ஒளியில்லாத அறையிலே
ஏதில் - காரணமே இல்லாமல்
பிணந்தழீஇ அற்று - ( முன்னமே அறிந்திராத ஒரு) பிணத்தைத் தழுவியதற்கு ஒப்பாகும்

ஒருவருமேல் உண்மையான அன்போடு அவரை விரும்பாமல், அவரது பொருள்மேலே நாட்டம் கொண்ட விலைமாதரின் பாசாங்கான தழுவலும், அணப்பும், ஒளியில்லாத அறையிலே காரணமே இல்லாமல், முன்பின் தெரியாத ஒரு பிணத்தைத் தழுவியதற்கு ஒப்பாகும், என்கிறது இக்குறள். சாவு வீட்டிலே முன்பின் தெரியாத பிணத்தைத் தழுவி சிலர் காசுக்காக ஒப்பாரி வைப்பர். உண்மையில் அவர்களுக்கும், இறந்தவருக்கும், அல்லது அவர் குடும்பத்தினருக்கும் ஒருவித தொடர்பும் இராது. அத்தகையவரைப் போன்றோரே விலைமாதரும் - காசுக்காகக் கட்டிப்பிடித்து முயங்குவர்; அதில் உண்மையான அன்பு இராது.

Transliteration:

poruTpeNDir poimmai muyakkam iruTTaraiyil
Edhil piNanthazIi aRRu

poruTpeNDir – women who sell physical pleasures for money
poimmai – their false
muyakkam – embrace of physical pleasure
iruTTaraiyil – in the dark room
Edhil – without a reason
piNanthazIi aRRu – embracing a dead corpse

Without true love for a person, having interest only in how much they pay, the embrace of physical pleasure from women that sell sex for money, is like embracing a dead body in the dark room without knowing the dead person. In death houses, there are people that come and cry for money, without being connected either to the dead person or the dead person's relatives. Such is the nature of women that sell their body for money; they have no real affection.

The embrace of women that sell themselves for wealth
  is like embracing the dead body in a darkroom – filth”

இன்றெனது குறள்:

பிணத்தைத் தழுவினார் போன்றாம் பணத்துக்
கிணங்கும் அணங்கைமுயங் கல்

piNaththaith thazhuvinAr pONRAm paNAththuk

kiNAngum aNangaimuyang gal

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...