27th
Oct 2014
பொதுநலத்தார்
புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட
அறிவி னவர்
(குறள்
915:
வரைவில்
மகளிர் அதிகாரம்)
பொதுநலத்தார்
-
பொதுமகளிராம்
பரத்தையரின்
புன்னலம்
- இழிதகை
இன்பத்திலே
தோயார்
-
மூழ்கமாட்டார்
மதிநலத்தின்
- சிறந்த
இயற்கையாக அறிவினால்
மாண்ட
– பெறப்பட்ட
சிறந்த கல்வியோடு கூடிய
அறிவினவர்
-
அறிவுடையோர்
கூறியதையே
மீண்டும் மீண்டும் கூறுகிற
குறளிது.
பொதுமகளிராம்
பரத்தையரோடு கூடும் இழிதகை
இன்பத்திலே,
சிறந்த
இயற்கை அறிவின் துணையோடு
பெறப்பட்ட,
சீர்த்தியான
கல்வியறிவோடு கூடிய அறிவுடையோர்
மூழ்கமாட்டார்.
கல்வியில்
பெரியோர்,
மதிநலம்
கொண்டு எச்சில் பண்டமென
அம்மாதரைக் கருதி அகத்தூய்மை,
மற்றும்
புறத்தூய்மை இவற்றில் உறுதியுடன்
இருப்பர் ஆதலால்,
அவர்களுக்கு
பரத்தையரோடு கூட விழைவிருக்காது.
Transliteration:
podunalaththAr
punnalam thOyAr madinalaththin
mANDa
aRivi navar
podunalaththAr
– women that sell themselves
punnalam
– the cheap physical pleasures offered by them
thOyAr
– in that, will not immerse themselves
madinalaththin
– with the knowledge they are born with
mANDa
– and the knowledge obtained through education
aRivinavar
– wisemen.
Another
repetitive verse. Nothing different from previous verse. Men of deep
wisdom, with innate knowledge and the knowledge through extensive
study shall not seek the cheap pleasures of women that sell
themselves for anyone as a barter. Wise men, shall consider such
women as impure and shall not seek their pleasure to keep their
internal and external sanctity.
“Wisemen
of innate and acquired knowledge shall not
seek the cheap pleasures
of women that are harlot”
இன்றெனது
குறள்:
இயற்கை
அறிவோடு கல்வி சிறந்தோர்
முயங்கவிலை
மாதரைக்கூ டார்
iyaRkai
aRivODu kalvi siRandOr
muyangavilai mAdaraikkU
DAr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam