91: (Being led by women - பெண்வழிச் சேறல்)
[Though
this chapter may be controversial by norms of present age of women’s
liberation, equality etc., this chapter talks about men of power listening and
being crazed with women, be it wife, or other illicit relations outside of marriage,
including prostitutes. Though, women have been serving significantly their
homes, states and societies in various capacities for a few centuries now, it
is evident from the suggested lowly tone of this chapter, it was lowly to
engage women in any job outside the home makers role given to them by the male
centric society of those times. vaLLuvar has probably recorded his observations
according to the prevalent norms of his times.]
13th Oct 2014
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
(குறள் 901: பெண்வழிச்சேறல் அதிகாரம்)
மனை விழைவார் - இல்லறவின்பம்
நாடி, மனைவியின் அணுக்கத்திலேயே இருக்க விழைவோர்
மாண்பயன் எய்தார் - பெருமைதரக்கூடிய
பயனெதுவும் அடையமாட்டார்
வினை விழைவார் - செயலாற்ற
விரும்புகிறவர்கள்
வேண்டாப் பொருளும் - விரும்பாதவொன்றும்
அது - அவ்வாறு இல்லாமல் இருப்பதேயாம்,
அதாவது இல்லாளை முயங்கிக் கிடப்பது.
இக்குறளுக்கு உரை எழுதுவதற்கு
முன்பு, இது வள்ளுவரின் கருத்தையொட்டி எழுதப்படுவதை மீண்டும் அடிக்கோடிட வேண்டியிருக்கிறது.
உலக இல்லத்தரசிகள் இதை சரியான பார்வையில் கொள்வார்கள் என்று நம்புவோம், வேண்டுவோம்.
பார்க்கும் பார்வையில்தான் பொருள் உள்ளது. குறள் சொல்லும் கருத்து இதுதான்.
இல்லாளை முயங்கி இன்பத்திலேயே
இருப்பார், பெருமை தரத்தக்கப் பயனொன்றும் அடையமாட்டார். வினையாக்கத்தில் விருப்பமுள்ளவர்கள்
செய்ய விழையாதவொன்று அதுவேயாம். அவர்கள் இல்லறத்தையும், வினையாற்றலையும் சரியான பங்கீட்டிலேயே
கையாளுவார்கள் என்பதையும் உணர்த்துகிறார் வள்ளுவர்.
கம்பர் அரசியல் படலத்தில்
கூறுவதையும் பார்க்கலாம். மகளிர் காரணமாக, ஆடவர்க்கு மரணம் ஏற்படும் என்று கூறும் என்று
வாலியை எடுத்துக்காட்டாகக் கூறி, பிறகு தயரதனும் இராமனும் அது காரணம்பற்றியே அல்லலுற்றதையும்
உணர்த்துகிற பாடலிது.
''மங்கையர் பொருட்டால் எய்தும் மாந்தர்க்கு மரணம்'' என்றல்,
சங்கை இன்று உணர்தி; வாலி செய்கையால் சாலும்; இன்னும்,
அங்கு அவர் திறத்தினானே, அல்லலும் பழியும் ஆதல்
எங்களின் காண்டி அன்றே; இதற்கு வேறு உவமை உண்டோ?”
தமிழ் இணையக்
கல்விகழகத்து இணையதளத்து கம்பராமாயண உரையில், இப்பாடலுக்கு விளக்கவுரை இவ்வாறு அளிக்கப்பட்டுள்ளது.
பிறர் மனைவியை
விரும்புவதால் மரணம் ஏற்படும் என்பதை வாலி,
சுக்கிரீவன் மனைவியை விரும்பி அதனால் இறக்க
நேரிட்டால் அறியலாம்.
எங்களில் என்றது மனைவி சொல்லைக் கேட்டு உயிர் துறந்த தயரதனையும்
உளப்படுத்திக்
கூறியதாகும். அல்லலும் பழியும் ஆதல் - தயரதன்
கைகேயிக்கு வரம் அளித்துத் துன்புற்றுப்
பழிக்கஞ்சி இறந்தான். சீதையின்
சொல்லைக் கேட்டுப் பொன்மானைத் துரத்திச் சென்றதால்
மனைவியைப்
பிரிந்து வருந்திப் பிறர் கூறும் பழிக்காளானான் இராமன். ''சீதை என்று
ஒருத்தியால் உள்ளம் தேம்பிய பேதையேன்'' (8772), ''எம்பி வாய்மையான்
தூயன உறுதிகள்
சொன்ன கொல் கொளேன் போயினென்; பெண் உரை
மாறாது போகலால் ஆயது. இப்பழியுடை மரணம்''
(8773); 'பெண்மேல்
வைத்த காதலின் இப்பேறுகள் பெற்றேன்'' (8651) என இராமனே பின்னர்
வருந்திக்
கூறுவன காண்க. இலக்குவனும் சீதை கூறிய சுடுமொழியால் அஞ்சி
இராமனைத் தேடிச்சென்றதால்
அல்லல்களே ஏற்பட்டன. எனவே,
மகளிர்மாட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
என்பது
உணர்த்தப்பட்டது.
''தூமகேது புவிக்கு எனத் தோன்றிய, வாம மேகலை
மங்கையரால்
வரும், காமம் இல்லை எனின், கடுங்கேடு எனும் நாமம் இல்லை;
நரகமும் இல்லையே'' (1427)
என்பது வசிட்டர் கூறிய அறிவுரை. மாந்தர்
என்பது ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவான
சொல்லாயினும் இங்கே
ஆடவரைக் குறித்தது, 'பெண்ணிற் பெருந்தக்க யா உள' (குறள் 54) என
அறத்துப்பாலில் கூறிய வள்ளுவர், பொருட்பாலில் பெண்வழிச் சேறல் (அதி.
91) என ஓர் அதிகாரமே
வகுத்து எச்சரித்துள்ளார். தாரையைப் படைத்த
கம்பரே இங்கும் பேசுகிறார் என்பது
எண்ணுதற்குரியது. கம்பர் தம் மகன் அம்பிகாபதியின் காதல் கதையின் காரணமாகவும்
இவ்வாறு செய்திருக்கக்கூடும்.
Transliteration:
manaivizhaivAr mANpayan eidhAr
vinaivizhaivAr
vENDAp poruLum adu
mania
vizhaivAr – those who desire to be with wife always
mANpayan eidhAr –
shall not attain any meritorious glory
vinai vizhaivAr –
those who are focused on their work
vENDAp poruLum – not
desiring object
adu – is also that ( desire to be
with wife always)
Before writing the commentary, it is
imperative to state and underline that this is written along the lines of
vaLLuvar’s thought. Hope women of the world will take it in the right spirit
and sense. After all, it all depends on how we want to interpret, what is saif
and how it is said. The verse says as follows:
One who is in the embrace of his wife always
shall not have any glorious accomplishments to his credit; Hence those who are
focused on work and accomplishments shall not always be so and will probably strike
a balance - is what is implied in this
verse by vaLLuvar.
VaLi’s
chasing after his brother Sugreeva’s wife got him death; Kambar cites that as
an example through the words of Rama, who also refers to Dasaratha’s doom due
to the boons he had given to Kaikeyi’s in his craze for her love and his own
difficulties because of his chasing a golden deer for his wife Seetha. In fact
Rama says it a couple of more places, blaming himself for getting everybody
into trouble because of heeding to his wife’s request, thus cautioning to be
careful with women, indirectly. Kambar goes to an extreme of comparing them to
comets that bring doom to earth. He says that if there is no desire (lust) for
woment, there will be no calamity on this earth.
It is
very possible that the words are those of poets’ imagination, more than the
thought of the hero of the epic. Kambar could be basing it on his own son
AmbikApathi’s plight because of his love for King’s daughter AmarAvathi.
“Desire
to be always in the embrace of wife, a man does not get use of any glory
Hence,
people focused on accomplishment of work shall not do that, and be sorry”
இன்றெனது குறள்(கள்):
இல்லாள்சொற் கேட்டொழுக இல்லை சிறந்தபயன்
நல்வினைஞர் கொள்ளார் அது.
illALsoR kETTozhuga illai siRandapayan
nalvinainjar koLLAr adu
மனைமுயங்கி வாழமாணில் லாப்பயனாம் கொள்ளார்
வினையாக்கம் வேண்டுவோர் அஃது
manaimuyangi vAzhamANil lAppayanAm
kOLLAr
vinaiyAkkam vENDuvOr ahdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam