அக்டோபர் 12, 2014

குறளின் குரல் - 906

12th Oct 2014

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
                        (குறள் 900: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)

இறந்து அமைந்த - அளவுக்கதிகமாக அமையப்பெற்ற
சார்புடையர் ஆயினும் - துணைகளைப் பெற்றிருந்தவர் ஆனாலும்
உய்யார் - அவர்கள் தப்பித்துப் பிழைத்தல் அறிது
சிறந்தமைந்த - சிறப்பாக அமைந்த மேன்மையான பண்புகள் நிறைந்த
சீரார் - மேலோர்
செறின் - சினந்து வெகுண்டார் என்றால்.

ஒருவர் அளவிறந்த துணைகளை கொண்டிருந்தாலும், சிறப்பான பண்புகளமைந்த மேன்மையானோர் அவர்மீது சினந்து வெகுண்டார் என்றால், அவர்கள் தப்பிப் பிழைத்தல் அரிது. சென்ற குறள்களில் சொல்லப்பட்ட அதே கருத்துதான்; மிகையான துணைகள் உடையவராயினும் மேன்மையோரைப் பிழைத்தார்க்கு உய்வில்லை என்பதே இக்குறளின் சொல்லப்படும் வேறுபட்ட கருத்து. சார்பு என்பதை, அரண், படை, பொருள், நட்பு என்று நான்கு வகைப்பட்டதாகக் கூறுவார் பரிமேலழகர். குணம், கல்வி, கேள்வி, அறிவுடைமை என்று நான்குவகைப்பட்டதாகக் கூறுவார் காளிங்கர்.

நாலடியார் பாடலொன்று இக்குறளின் முற்றுக் கருத்தையும் கூறுவதாக அமைந்தது. படம் விரித்தலையுடைய நாகப்பாம்பு நிலத்தின் வெடிப்பினுள்ளே உள்ளதானாலும் இடியின் கொடிய ஒலிச்சீற்றமானது தொலைவில் இருந்தும் அதற்கு அஞ்சும், அதுபோல, அருமைப்பாடுடைய பாதுகாப்பிடத்தைச் சேர்ந்திருந்தாலும், மேன்மையுடைய பெரியோர் சீறுவாராயின், ஏனைச் சிறியோர் அதற்குத் தப்பமாட்டார். அப்பாடலானது:

விரிநிற நாகம் விடருள தேனும்
உருமின் கடுஞ்சினஞ் சேணின்றும் உட்கும்;
அருமை யுடைய அரண்சேர்ந்தும் உய்யார்
பெருமை யுடையார் செறின்.

Transliteration:

iRandamainda sArbuDaiyar Ayinum uyyAr
siRandamainda sIrAr seRin

iRand(u) amainda – excessive
sArbuDaiyar Ayinum – even if they have support system of all that protect
uyyAr – it is difficult for them to survive (they will perish)
siRand(u) amainda – that who are excelling in virtues
sIrAr – noble persons
seRin – get angered

Even if a person has excessive support of all kinds, if he invites the wrath of noble men with excessively good virtues, he is certain to be doomed. The verse is not very different from other verses in this chapter, except it speaks of doom despite all the support for a person if he invites the wrath. Parimelazhagar identifies, fortress, army, wealth and friendship as the four types of protections. Kalingar on the other hand, lists character, education, listening to knowledgeable sources, and intellect as the four factors of support system..

A poem from nAlaDiyAr captures the same thought with a metaphor of a cobra. A deadly cobra, though hides in the gaps of barren land, would fear the thunder from the skies. Likewise, if the noble persons are angered, then the persons who invite their, regardless of how much support they have will not be spared.

“Though a person of all strength of immense support
 perish will he, if angers the persons of noble  sort”


இன்றெனது குறள்:

தக்கதுணை கொண்டார்க்கும் உய்வில்லை எக்காலும்
தக்காரே சீறிவெகுண் டால்

thakkathuNai koNDArkkum uyvillai ekkAlum
thakkArE sIRiveguN Dal.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...