அக்டோபர் 11, 2014

குறளின் குரல் - 905

11th Oct 2014

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
                        (குறள் 899: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)

ஏந்திய - தாம் தூக்கிப் பிடித்திருக்கும் உயர்ந்த
கொள்கையார் - கொள்கைகளைக் கடை பிடிக்கும் பெரியோர்
சீறின் - சினந்து கோபித்தால்
இடை முரிந்து  -  நடுவிலேயே இழந்து (எதை? - ஆட்சியை)
வேந்தனும் - அரசனும் (ஆள்வோனும்)
வேந்து - தம் அரசாட்சியை, பதவியை
கெடும் - இழந்துவிடுவான்

உயர்ந்த கொள்கைகளை உடைத்தாராகி, அவற்றைத் சிரத்திற்கு மேலாகக் காப்பவர்கள் சினந்தால், ஒரு நாட்டை ஆள்வோனும் தம்முடைய பதவியை இழக்க நேரிடும். அத்தகையோர் சினப்பதற்கும் அவ்வாள்வோரின் இழிசெயலால்தான் இருக்கும் என்பது குறிப்பால் உணர்த்தப்படுகிறது

பரிமேலழகர் இதற்குப் புராணக்கதையொன்றை மேற்கோளிடுகிறார். நகுஷன் என்பான் தம்முடைய யாகத்தின் பலனால் இந்திரப் பதவி பெற்று ஆட்சி செய்கையிலே, அகத்தியர் வெகுள பிழை செய்தான். அதனால் தன்னுடைய இந்திரப் பதவியையே இழந்தான். அதை மனத்திலிருத்தியே இக்குறளை வள்ளுவர் செய்திருக்கக்கூடும் என்பார்

பரிமேலழகர்.மேலும் இக்குறளையும் சேர்ந்து முன்னால் சொல்லப்படுவாதய நான்கு குறள்களும் முனிவர்களையும், தவவலிமையுடையவர்களையும் பிழையாமை பற்றியது என்பார். அப்படியே கொள்ளலாம் என்றாலும், தானம், தவம், ஒழுக்கம், சீலம், கல்வி, இவற்றில் மிக்க பெரியோர்களைச் சொல்லுவதாகவே நாம் கொள்ளலாம்.

Transliteration:

Endiya koLgaiyAr sIRin iDaimurindu
vEndanum vEndu keDum

Endiya – those that uphold high values
koLgaiyAr – as their principles in their lives
sIRin – if they get angry
iDaimurindu – in the middle will lose (what? – their rule)
vEndanum – even the ruler
vEndu – this rule and status as the ruler
keDum – will ruin

If people of high values as their priniciples held, get angered, which is for a valid reason, even a ruler will lose his status as the ruler and the right to rule. Given that people of such high values would not get angered unprovoked or for any ordinary reason,  it is to be constured that that the rulers would invite the wrath of such noble souls being doing something seriously wrong.

Parimelazhagar cites a story form mythology of Nakusha who loses his status as Indra by inviting the wrath of Sage Agasthya and infers that vaLLuvar has probably done this verse bearing that in mind.

He further implies that this and the previous three verse are all about not being offensive to ascetic people. Though that may be true, it is equally applicable to penitents, virtuous, knowledgeable and people of good contuct.

“If people that hold high values, are angered
 even a ruler will fall from his state denigrated”


இன்றெனது குறள்(கள்):

சீரியர் சீற்றத்தால் ஆள்வோரும் சீர்குலைந்து
பேரிடர் பட்டழி வர்

sIriyar sIRRaththAl AlvOrum sIrkulaindu
pEriDar paTTazhi var

அரசிழந்து ஆள்வோன் கெடும்சிறந்த கொள்கை
உரமுடையார் சீறிடச்செய் தால்

arasizhandu AlvOn keDumsiRanda koLgai
uramuDaiyAr sIRiDachchei dAl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...