அக்டோபர் 09, 2014

குறளின் குரல் - 903

9th Oct 2014

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
                        (குறள் 897: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)

வகைமாண்ட - முறையான உறுப்புகளைக் கொண்ட பெருமை பெற்ற
வாழ்க்கையும் - வாழ்க்கையும்
வான்பொருளும் - ஈட்டி வைத்த பெரும் பொருளும்
என்னாம் - என்ன பயனுடைத்தாம்?
தகைமாண்ட - நல்லொழுக்கமே தமது பெருமையாகக் கொண்ட
தக்கார் - தகைமையுடையோர் ஒருவரை (இங்கு ஆள்வோரை என்னல் என்பது பொருந்தும்)
செறின் - வெகுள்வாராயின்.

ஆள்வோர்க்கு எல்லாவித நல்ல உறுப்புகளும் (நாடு, அமைச்சு, அரண், படையென்ற நான்கும் என்பார் பரிமேலழகர்), பெரும் செல்வமும் இருந்து அவற்றால் என்ன பயன்? நல்லொழுக்கத்தையே தம் பேறாகப், பெருமையாகக் கொண்ட தகவுடையோர், அவரை சினந்து வெகுளத்தக்கவராக இருப்பாராயின்? அவர் அழிவுப்பாதையிலேயே இருக்கிறார் என்பதை உணர்த்துவதாம் அது.

Transliteration:

vagaimANDA vAzhkkaiyum vAnporuLum ennAm
tagaimANDa takkAr seRin

vagaimANDA – Having all proper aspects of a rule (state, ministry, protection, a good army, says parimelazhagar)
vAzhkkaiyum – such a life
vAnporuLum – and the wealth amassed through effort and industry
ennAm – what use are they?
tagaimANDa – people of virtuousity
takkAr – and glorious greatness
seRin – if angered.

Though a ruler may be blessed with all the aspects fulfilled such as state, good ministry, protection and a capable army and immense wealth, what use are they for him? Blessed with good virtues, and having that as their sole glory, if the great are upset and angered by their conduct? It imples only the impending destruction for that ruler..

“What use is it to be blessed with all that required for a state
 if the ruler invites the wrath of a virtuous and glorious great ?”


இன்றெனது குறள்:

சீரியோர் சீறச்செய் வோர்க்குப் பெரும்பொருளும்
பூரித்த வாழ்வுமென்ப யன்?

sIriyOr sIRachchei vOrkkupp perumporuLum
pUrittha vAzhvumenp yan?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...