10th Oct 2014
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
(குறள் 898: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)
குன்று அன்னார் - மலையளவு
மாட்சிமை உடையோர்
குன்ற - கெடுவதற்கு
மதிப்பின் - நினப்பாராயின்,
அல்லது அவரை அவமதித்தால்
குடியொடு - தம் குடிமுழுதும்
நின்று அன்னார் - விளங்க
நிலைத்தச் செல்வம் பெற்றவர் போலிருந்தாலும்
மாய்வர் - அழிந்திறப்பர்
நிலத்து - இவ்வுலகிலே
“கெடுவான் கேடு நினைப்பான்” என்ற நிலைமொழியின் கருத்தையே கூறுகிறது இக்குறள்.
பெரியார் என்பதை, மலையளவு மாட்சிமை உடையவர் என்று உயர்வைச் சொல்லி, அன்னாருக்கு கேடு
நினைத்து அவமதிப்பாராயின், அவர் தம் குடிமுழுதும் விளங்க நிலைத்த செல்வத்தோராயினும்,
இவ்வுலகில் வாழாது அழித்து சாக்காடுறுவர், என்கிறார் வள்ளுவர்.
மலையளவு என்ற உவமையினால் அவர்களின் பொறுக்கும் தன்மையைச் சுட்டி, வெயிலால் காய்ந்தாலும்,
மழையால் நனைந்தாலும், சலியாது, மாட்சியிலே உயர்ந்து நிற்பதைக் குறிக்கிறார் வள்ளுவர்.
இது பரிமேலழகரின் அழகான விளக்கம்.
Transliteration:
kunRannAr kunRa madippin kuDiyODu
ninRannAr mAyvar nilaththu
kunR(u) annAr – To the people of mountainous scale of
greatness
kunRa – for(their greatness) to diminish
madippin – if disgrace is brought up on them
kuDiyODu – their entire clan
ninR(u) annAr – even if it looks like stable with
immeasurable wealth
mAyvar – will perish
nilaththu – on this earth.
“That who is
destined to be doomed will dare” is a rought translation of an adage in
Tamil. To imply the measure of greatness of great, vaLLuvar says “mountainous”.
For such great people to diminish in their greatness and pride, if a person intends
disgrace to them, then even if the person has wealth for their entire clan for
generartions last, they would perish with their entire clan, says vaLLuvar.
By saying
“mountainous grace” to great people, their patience, whether is pours or
steaming hot, is implied here – an inference by Parimelazhagar.
“If disgrace is intended for the great people
of mountainous stature,
though
have wealth for the entire clan perishes, to their discomfiture”
இன்றெனது குறள்:
வெற்பனையோர் மாட்சிகுன்றச் செய்வோர் குலத்தோடு
பொற்பழிந்து ஆகும் மடிந்து
veRpanaiyOr mATchikunRas cheivOr kulaththODu
poRpazhindu Agum mADindu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam