அக்டோபர் 08, 2014

குறளின் குரல் - 902

8th Oct 2014

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
                        (குறள் 896: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)

எரியால் சுடப்படினும் - தீயினால் சுடப்படினும்
உய்வுண்டாம் - ஒருவர்க்கு உயிர் பிழைக்கக்கூடும்
உய்யார் - அவ்வாறு உயிர்த்து இருக்கமாட்டாது அழிவார்
பெரியார்ப் - தகுதியால் பெரியோரை
பிழைத்தொழுகுவார் - அவமதித்து வாழ்வோர்

ஒருவர் நெருப்பால் சுடப்பட்டு பாதிக்கப்பட்டாலும், அவர் அதிலிருந்து பிழைத்துவிட முடியும். ஆனால் தம்மிலும் தகுதியால் பெரியோரை, வலியோரை அவமதிப்பார் ஒருநாளும் அவ்வாறு உயிர்த்திராது, அழிவார், என்கிறது இக்குறள். தகுதியாலும் தவத்தாலும் பெரியோர்கள் கொள்ளும் சினமானது சுட்டெரிக்கும் நெருப்பைவிட வலிமையானது.

இன்னா நாற்பது, “இன்னா, பெரியார்க்குத் தீய செயல்” என்றும் “பெருமையுடையாரைப் பீடழித்தல் இன்னா” என்றும் கூறும். பழமொழி நானூற்றுப் பாடலொன்று, இக்குறளின் கருத்தை இவ்வாறு கூறுகிறது:

ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.

இப்பாடல் சொல்லும் கருத்து. பெரியோர்களை வெகு குறைவாக மதிப்பிட்டு, இவர்கள் எம்மோடு மாறுபடுதல் கூடுமோ என்று ஆணவத்தால் நினைத்து, அறிவிற் சிறியார் தாமாக வன்மையானவும், முறையற்றனவும் செய்வதும் சாகப்போவது அறியாமல் விலங்குகள் அவை செல்லும் வழியினை அறியாதவாறு, அறிவு மயங்கலால், ஊரினுள் புகுந்து தம்முடைய உயிரையே இழந்து வருந்துவது போலாகும்

Transliteration:

eriyAl suDappaDinum uyvunDAm uyyAr
periyArp pizhaithozhugu vAr

eriyAl suDappaDinum – Even if burnt by fire
uyvunDAm – a person can still survive
uyyAr – but not so, (will not survive)
periyArp – the powerful
pizhaithozhuguvAr – those that ill treat them (the powerful)

A person may come back alive even from the thick of a wild fire; but shall not if he acts offensively to people of higher and meritorious stature; it will be self-destructing. Their wrath shall burn more severely.

Underestimating the meritorious elders and be offensively disrespectful to them, is like animals, not knowing they would be butchered if caught, coming into the town, a sel-destructing pursuit, says a pazhamozhi nAnURu poem, similar to the idea of this verse.

“A person may come back alive, even if badly burnt and charred
 But being disrespectful to the great, a person is as good as dead”


இன்றெனது குறள்:

நெருப்பிடைப் பட்டும் பிழைக்கலாம் வல்லார்க்
கொருவர் பிழைத்தால் அரிது

neruppiDaip paTTum pizhaikkalAm vallArk
koruvar pizhaiththAl aridu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...