அக்டோபர் 07, 2014

குறளின் குரல் - 901

7th Oct 2014

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
                        (குறள் 895: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)

யாண்டுச் சென்று - எங்கு சென்றாலும்
யாண்டும் உளர் ஆகார் - எவ்விடத்தும் உய்ய, வாழ மாட்டார்
வெம் துப்பின் வேந்து - பெரு வலிமை உடைய ஆள்வோரால்
செறப்பட்டவர் - சினத்துக்கு ஆளானவர்

பெரிய வலிமையுடைய ஆள்வோரின் சினத்துக்காளானவர், எங்கு சென்றாலும், எங்கும் வாழ முடியாதவராகிவிடுவார்.அதனாலேயே அத்தகு பெரியோரைப் பிழையாமை நன்றாம்.

கி.வா.ஜவின் ஆராய்ச்சியுரை, இக்குறளோடு முற்றும் ஒப்பதாய சீவக சிந்தாமணிப் பாடல் வரியினைச் சுட்டுகிறது: “வேந்தொடு மாறு கோடல் விளிக்குற்றா தொழிலதாகும்”.  அதாவது அரசனோடு மாறுபட்ட கருத்தில் நிற்பது கேட்டினை அடைய எண்ணுபவரது தொழிலாகும் என்கிறது இவ்வரி.

Transliteration:

yANDuchchEnru yANDum uLarAgAr ventuppin
vEndu seRappaT Tavar

yANDuch chEnru – where they go
yANDum uLar AgAr – can never prosper anywhere
vem tuppin vEndu   mighty strong rulers’ (facing)
seRappaTTavar – wrath  (such ruler)

Those who face the wrath of a mighty ruler can never survive and prosper regardless of where they go; hence, do not invite the wrath of such great and mighty.

“One shall not live in peace and prosperity anywhere
 they go, if they face the wrath of the ruler, so beware”


இன்றெனது குறள்:

வெந்திறத் தாள்வோர் சினத்துக்கா ளாகினோர்
எந்தவிடம் சேர்ந்துமுய் யார்

venthiRath thALvOr sinaththukkA LAginOr
endhaviDam sErndhumuy yAr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...