அக்டோபர் 06, 2014

குறளின் குரல் - 900

6th Oct 2014

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
                        (குறள் 894: பெரியாரைப் பிழையாமை அதிகாரம்)

கூற்றத்தைக் - மரணதேவனை
கையால் விளித்தற்றால் - கைதட்டி கூப்பிட்டு வாவென்று அழைத்தல்போலாம்
ஆற்றுவார்க்கு - வல்லமையும் ஆற்றலும் உடையவர்க்கு
ஆற்றாதார் - அஃதில்லாதவர்கள்
இன்னா செயல் - துன்பம் தருவனவற்றைச் செய்தலென்பது.

வல்லார்களுக்கு அவ்வல்லமைகள் இல்லாதவர்கள் துன்பம் விளைவிப்பவது என்பது மரண தேவனை, கைத்தட்டி கூப்பிட்டு “வா” என்று அழைப்பது போலாகும். அழிவைத்தாமே தேடிக்கொள்வது போலாகும். இக்கருத்தை ஒரு பழமொழிப் பாடல் அழகாகக் கூறுகிறது. அப்பாடல்:

வெஞ்சின மன்னவன் வேண்டாத வேசெயினும்
நெஞ்சத்துட் கொள்வ சிறிதும் செயல்வேண்டா
என்செய் தகப்பட்டக் கண்ணும் எழுப்புபவோ
துஞ்சு புலியைத் துயில்.

கொடும் சினத்தை உடைய அரசன், தமக்குக் கீழே வாழ்வார்க்குத் தீமையே செய்தாலும், அவன் மனத்தில் கறுவுகொள்ளத் தக்கனவற்றை, அவன்கீழ் வாழ்வார் சிறிதளவுகூட செய்ய வேண்டாம். எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்யுமென்ற புலி, தம்மிடத்து அகப்பட்டாலும், யாராவது, உறங்குகின்ற புலியை எழுப்புவார்களோ? என்கிறது இப்பாடல்.

Transliteration:

kURRaththaik kaiyAl viLiththaRRAl ARRuvArkku
ARRAdAr innA seyal.

kURRaththaik – the lord of death
kaiyAl viLiththaRRAl – inviting by waving hands (the dealth lord)
ARRuvArkku – for capable and powerful
ARRAdAr – that who are powerless
innA seyal – doing ill.

If the powerless and incapable persons attempt to do ill to the capable and powerful, it is like inviting the deathlord by beckoning, inviting self-destruction, says this verse. A verse from pazhamozhi nAnURu says with an example of an adage.

Even if a king that is powerful does ill and undesirable, those that live under his rule, shall not think adversely as it is like waking up a captured tiger - will definitely destroy and kill.

“To act against the powerful and strong
 is like beckoning deathlord, dead wrong”


இன்றெனது குறள்:

வல்லார்க்க தில்லார்கள் இன்னாத செய்வது
கொல்கூற்றைக் கூப்பிடுதல் போல்

vallArkka dillArgaL innAda seivadu
kolkURRaik kUppiDudal pOl

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...