2nd Sep 2014
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
(குறள் 890: உட்பகை அதிகாரம்)
உடம்பாடு இலாதவர் - உள்ளத்தால்
உடன்படாது உட்பகை கொண்டு உழல்வாரோடு
வாழ்க்கை - வாழ்கின்ற வாழ்க்கை
குடங்கருள் - ஒரே
அறையினுள்
பாம்போடு - கொடிய நாகத்தோடு
உடன் உறைந்தற்று - உடன்
வசித்தல் போன்றதாம்.
ஒருவருக்கொருவர்
உள்ளத்தால் உடன்படாத கருத்துடையவர்கள், உள்ளத்தில் பகையை ஒளித்து வளர்த்திருப்பர்.
அன்னாரோடு சேர்ந்திருத்தல் என்பது, ஒரே அறையில் கொல்லும் கொடிய நாகத்தோடு தங்குதல்
போன்றதாம். அழிவு எப்படியும் உறுதி, என்று சொல்லி அதிகாரத்தை நிறைவு செய்கிறார். உட்பகை
கொண்டோர் வஞ்சனையில் பழகுபவர். ஔவை சொல்லியபடி, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்”.
பழமொழி நானூறு பாடலொன்றூ இக்குறளின் கருத்தையொட்டியது. அது கூறுவதாவது:
மூங்கில்
போன்ற தோளையுடையாய்! தலைவனாக வேண்டுமென நினைக்கும் வஞ்சகரை தன்னைப்போல் நினைக்கும்
அரசனின் நிலை, பாம்புடன் ஓர் அறையுள் வாழ்வது போன்றது எனக் கூறுகிறது. இனி அப்பாடல்:
தலைமை
கருதும் தகையாரை வேந்தன்
நிலைமையால்
நேர் செய்திருத்தல் - மலைமிசைக்
காம்பனுக்கும்
மெந்தோளாய் அஃதொன்றோ ஓரறையுள்
பாம்போடு
உடனுறையும் ஆறு”
Transliteration:
uDampADu ilAdavar vAzhkkai kuDangaruL
pAmboDu uDanuRain daRRu
uDampADu ilAdavar – Those who are not in agreement and dwell in
enmity within
vAzhkkai – the life they live (with each other)
kuDangaruL – (is like) in the same room
pAmboDu – with a deadly snake
uDan uRaindaRRu – living together
Those who are
perpetually discordant, brew enmity within, though outwardly may not me showing
it; so prudent it is to avoid being with such cunning people; it is like
staying with a deadly snake, which may strike any time to kill. As AuvayyAr has
said, never be in the company of cunning.
There are there many
examples from literature, from pazhamozhi nanURu, nAnmaNik kaDigai, kamba
rAmayaNam, periya thirumozhi citing the same metaphor/
“It is like living with a deadly snake in the
same hut,
to
live with someone having enmity within his heart”
இன்றெனது குறள்:
ஓரறைக்குள் பாம்பொடுவாழ் வாழ்வுவாழ்வு உட்பகை
நீரதமாய் சூழ்ந்தநெஞ் சோடு (நீரதம் - மேகம்)
OraRakkuL pAmboDuvAz vAzhvuvAzvu uTpagai
nIradhamAi sUzhndanen chOdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam