30th Sep 2014
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
(குறள் 888: உட்பகை அதிகாரம்)
அரம் பொருத - கொல்லன் கை பொன்னைத் தேய்க்கும் கருவியால் தேய்க்கப்பட்ட
பொன் போலத் தேயும் - பொன்
தேய்வது போல தேய்ந்தழியும்
உரம் பொருது - தங்கள்
வலிமையால், யார் வலிமிக்கவர் என்கிற போட்டிச் சண்டையில்
உட்பகை உற்ற - உட்பகை
கொண்டு உழலுகின்ற
குடி - குலம்
கொல்லன்
கையில் உள்ள, பொன்னை அறுக்கின்ற அரமானது தேய்த்துத் தேய்த்தே பொன்னைக் குறைத்துவிடும்.
அதைப்போல தங்களுள் யார் பெரியவர் என்கிறப் போட்டிச் சண்டையில் உருவாகும் உட்பகையில்
ஒருவருடைய குலமே சுற்றத்தோடு முற்றுமழியும். இக்குறளின் உவமை மிக சிறப்பானது. குடியின்
ஒற்றுமை பொன்போன்றது; உட்பகை
என்பது அரம் போன்றது; மெதுவாக மறைமுகப் போட்டிச் சண்டையை உருவாக்கி ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளவே
உதவும். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் கொள்ளும் உட்பகை போலல்லாது ஒருவருக்குகொருவர்
கொள்ளும் உட்பகையை அழகாக உருவமிக்கும் குறளிது.
“கண்ணுக்குக்
கண்” என்று ஆனால் மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமல் வளர்ந்து, தங்கள் குலத்தையே முற்றும்
அழிக்கச் செய்வது.
Transliteration:
Aramporuda ponpoLath thEyum uramporudu
uTpagai uRRa kuDi
aram poruda –
Like the file in the goldsmiths’ hand
Pon poLath thEyum – can
file away the gold, will diminish and perish
uram porudu – in
the competitive binge as to who is mightier
uTpagai uRRa –
mutually fosters enmity within
kuDi – the entire clan
The
file in the hand of a gold smith can file the entire gold away. Likewise,
mutually fostered enmity within a clan, in a binge of competition as to who is
mightier, can completely perish them. The metaphor here is subtle and beautiful.
The comparison of gold to the togetherness, implies how precious the
togetherness for a clan is. Also, how the competitiveness and ensuing hidden
enmity within, slowly but surely can diminish
that togetherness and completely destroy them.
“An
eye for an eye will make everyone blind”, is equally applicable for hidden
enmity, though enmity is not seen in this case.
“Like a file in the goldsmith’s hand can
diminish the gold slowly
the
hidden enmity within, will perish the clan perish eventually”
இன்றெனது குறள்:
கொல்லனரம் பொன்னழிப்ப போலரமாய் உட்பகையின்
வல்லமை சுற்றமறுக் கும்
kollanaram ponnazhippa pOlaramAi uTpagaiyin
vallamai suRRamaRuk kum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam