செப்டம்பர் 29, 2014

குறளின் குரல் - 893

29th Sep 2014

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
                        (குறள் 887: உட்பகை அதிகாரம்)

செப்பின் - செப்புத் தகடினால் ஆகிய பாத்திரத்தின்  மூடி
புணர்ச்சிபோல் - அதனுடைய பாத்திரத்தோடு சேர்ந்திருப்பதுபோல்
கூடினும் கூடாதே - சேர்ந்திருப்பினும் இரண்டும் தனியாக ஒன்றொடொன்று உள்ளத்தால் கூடாதவையாம்
உட்பகை உற்ற - உட்பகையை தம்முள் வைத்திருக்கும்
குடி - குடியினர்.

ஒன்றாக சேர்ந்திருப்பதுபோல் தோன்றினும், ஜாடியும் மூடியும் இரண்டாக பிளவு பட்டவையே. அதே போன்றோர்தான் உட்பகையால் உழலும் குடியினரும் - வெளிப் பார்வைக்கு சேர்ந்திருப்பதுபோல தோன்றினாலும், அவர்கள் பிளவு பட்டவர்களே. ஜாடி என்பது இந்தி மொழிச் சொல்லாக இருப்பினும் எதுகை தரும் ஓசை நயத்துக்காகச் சொல்லப்படுகிறது. குப்பி அல்லது சிமிழ் என்ற சொற்கள் அழகானவை.  செப்பு, சொப்பு போன்றவையும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.

சிமிழோ, குப்பியோ, அவற்றின் மூடியோடு சேர்ந்திருந்தால்தான் அழகு. தவிர அவை  எல்லோரும் அறிந்தே இரண்டாக இருந்து, தோற்றத்திற்கு ஒன்றாக இருப்பவை. வெளியில் உள்ளவர்களால் பிரிக்கப்பட்டாலே தவிர விட்டுப் பிரியாதவை. உட்பகையோ இதற்கு நேர் மாறானது. யாருக்குமே சேர்ந்திருப்பதுபோல் தோன்றினாலும், உள்ளுக்குள் பகையாகவே இருக்கும், அழிக்கத் தருணத்தையே பார்த்திருக்கும். தவிரவும் வெளியிலிருப்பவர்களின் தூண்டுதல் பிரியும் வேகத்தை அதிகரிக்கலாமே தவிர, தாமாகவே அழித்துக்கொள்ள முனைபவை. சிமிழுக்கும் அதன் மூடிக்கும் வெளியில் இருப்பவர்களால்தான் பிரிவும், பிளவும். ஆனால் உட்பகைக் கொண்டவர்களுக்கு அவர்களாலேயே அது நிகழும். இக்குறளின் உவமை சற்றும் பொருந்தாததாகவே உள்ளது.

Transliteration:

Seppin puNarchchipOl kUDinum kUDAdhE
uTpagai uRRa kuDi

Seppin – the lid of the vessel made with copper
puNarchchipOl – like how it may be in snug fit with its vessel
kUDinum kUDAdhE – those seem to be together, in hearts they are not united (who?)
uTpagai uRRa – that who nurture enmity within (who?)
kuDi – apparently closely knit kin

Though apparently join together, the lid and its vessel are separate. Likewise, is the kin that have a façade of outward kinship, but inside with a seething enmity, says this verse. Though outwardly this verse seems to have a meaningful metaphor, it does not seem to make sense. The simmering enmity in outwardly closely-knit kin will destroy each other; it is better off for those apparently close kin to separate permanently, instead of being together and trying to destroy each other; but, this not the case with a vessel and its lid. But for an external agent, they don’t have enmity between them and they are useful only as a unit.

The simmering enmity within apparently closely knit kin
Is like a lid with its vessel, together, but connection none”


இன்றெனது குறள்:

குப்பியின் மூடிபோல் சேர்ந்தாலும் உட்பகை
எப்போதும் கூடாத ஒன்று

kuppiyin mUDipOl sErndhAlum uTpagai
eppOdhum kUDAdha onRu

சிமிழ்மூடி போல்சேர்ந்தும் உட்பகை நீரின்
குமிழ்போல் வதாம்குடிக் கு

chimizhmUDi pOlsErndhum uTpagai nIrin
lumizhpOl vathAmkuDik ku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...