24th Sep 2014
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
(குறள் 882: உட்பகை அதிகாரம்)
வாள்போல - கொல்லும் ஆயுதமான வாளினைப் போல்
பகைவரை - கொல்லும் பகைவரைக்கூட
அஞ்சற்க - அஞ்ச வேண்டாம்
அஞ்சுக - (ஆனால்) அஞ்சவேண்டும்
கேள்போல் - உறவினரைப்போல இருந்து
பகைவர் - உட்பகைகொண்ட வஞ்ச நெஞ்சத்தினரின்
தொடர்பு - உறவினை.
உடனிருந்து கொல்லும்
நோய் போலாம், உட்பகையோடு உதட்டுறவில் இருக்கும் உறவும், சுற்றமும். அவர்களையே கண்டு
அஞ்ச வேண்டும். வாள்போன்ற கொல்லும் ஆயுதம் போன்றவராம் எதிர் நின்று போர் புரிவோரைக்கூட
அவ்வளவு அஞ்சத்தேவையில்லை என்பதே இக்குறள் சொல்லுவது. உட்பகையை சுருக்கமாகச் சொல்லுகிறது.
கி.வா.ஜ-வின் ஆராய்ச்சிப்
பதிப்பிலே மேற்கோளாக இடப்பட்டுள்ள பழமொழிப் பாடல், இக்குறளின் முற்றுக் கருத்தையும்
எவ்வாறு கூறுகின்றது என்று பார்ப்போம்.
இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பரியார் தமரா - யடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று குருடு.
இப்பிறப்பில் பழியையும் பின்வரும் பிறவிகளில் பாவத்தையும்,
தம்மினின்றும் நீக்காராய் உட்பகையோடு தம்மவர்போல் ஒட்டிவாழும் உறவையும் சுற்றத்தையும்விட,
நேர்முகமாகப் பகைக்கொண்டு தன்னை ஒட்டி ஒழுகாதவர்கள் தீயோரோ எனில் அன்று! ஒளி குன்றிய பார்வையுடைய கண்ணினும் பார்வையின்றி
நிற்கும் கண்ணே போதும் என்பது பழமொழி.
Transliteration:
vALpoL pagaivarai anjaRka anjuga
kElpOl pagaivar thoDarbu
vALpoL – like a killing sword
pagaivarai –
even such enemies
anjaRka – need not be feared
anjuga – but fear
kElpOl – like pretending to
be relatives
pagaivar – nurturing enmity
within
thoDarbu – their relationship.
Just like disease
that stays to kill, those kith and kin with façade friendship at lips, but
vengeance at heart are to be feared truly. One does not have to even fear an
enemy who can kill like sword. A beautiful verse to impactfully convey the
chapters’ intent.
In Ki.vA.ja’s
research edition quotes a couple of verse from Pazhamozhi nAnURu and Kamba
rAmAyaNam that convey the same thought in their own beautiful ways. Pazhmozhi
nAnURu says, better than having a faulty eys,which is not able to see, is to be
blind. Likewise, better than having enemies within, it is better to enemies
that directly confront.
“Don’t need to fear even the enemy that can kill like
a sword
But
fear foes with the garb of kin, and friendship they accord”
இன்றெனது குறள்:
அஞ்சற்க ஆயுதத்தால் தாக்கும் பகைக்குமாயின்
வஞ்ச உறவுநெஞ்சை அஞ்சு
anjaRka AyudhaththAl thAkkum pagaikkumAyin
vanja uRavunenjai anju
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam