செப்டம்பர் 23, 2014

குறளின் குரல் - 887

89: (Enemy within - உட்பகை)

[This chapter talks about the internal enemies, enemies within, their ways, how to identify them, who they are, how they should be feared and watched, and what such internal enemies can do. Though almost all the verses describe the nature of such enemies within, the idea is to emphasize how to be wary of such enemies within. ]

23rd Sep 2014

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
                        (குறள் 881: உட்பகை அதிகாரம்)

நிழல் நீரும் - நிழலில் இருக்கும் நீரும் (இனிதென்று பொதுவாகத் தோன்றுவது)
இன்னாத - கேடாகிய நோய் விளைவித்தால் (வெயில் பாராது, கிருமிகள் தோன்றி நீர் கெடுவதால்)
இன்னா - அது துன்பு செய்யும் நீரே
தமர்நீரும் - தம்மனோர் என்று கொள்ளும் உற்றார் இயல்பும்
இன்னாவாம் - துன்பம் விளைவிப்பதே
இன்னா -அவர்கள் ஊறு விளைவிப்பன
செயின் - செய்தார் எனின்

படித்து எளிதில் பொருள் கொள்ளமுடியாத சொல்லமைப்பு உள்ள குறளிது. சற்று ஊன்றிப் படித்தாலே விளங்கும். பொதுவாக, நிழல் நீர் ஏன் கேடு விளைவிக்கும் என்ற கேள்வி எழும்.  வெயில் படாத குட்டையாக இருப்பின், நோய்தரும் கிருமிகள் உண்டாக்கி, அது நிழலிலே இருக்கும் உண்ணீரென்று அருந்துவோருக்கு, துன்பத்தையே தரும். அதுபோலவே தம்மவர், சுற்றம் என்பவரை, அவரை நிழலாகக் கருதினால், அவர்களிலும் பண்படாது தீயவற்றில் ஊறியவர்கள் ஊறு செய்தால் (அறிந்தோ, அறியாமலோ) அதுவும் துன்பம் விளைப்பதே. இக்குறளின் கருத்தைச் சொல்ல, பரிதியாரின் உரை உதவியது. உறவிலேயே உட்பகையும் என்பதற்காகச் சொல்லப்பட்ட உவமையே நிழல் நீர் என்பது.

Transliteration:

NizhalnIrum innAdha innA thamarnIrum
innAvAm innA seyin

Nizhal nIrum – The water under shade (may seem refreshing generally)
innAdha – if it brings painful diseases (because without sunshine, may develop disease spreading worms, insects)
innA – is construed to be misery causing
thamar nIrum – so is the state of the relatives that are our own and supposedly close to us
innAvAm – can be misery causing
innA – deeds that cause misery
seyin – if they do (because of enmity within due to any number of reasons)

This verse is not easy to interpret in the first few readings. All commentaries except “ParidhiyAr” and mu.vA (whose commentary for this verse is perhaps based on ParidhiyAr), are indeed confusing and lack the clarity. The mention of disease in ParidhiyAr commentary shed light on the fact the water which is under shade for a long time, without sunshine may construed to be refreshing for unthinking; but when drunk, sure will give diseases. Likewise, people that are kith and kin might be construed to be offering shade of support; but if the have treacherous bent and intent, they would only be and do ill causing misery.

“Water undershade deceptively refreshing, could cause pain and misery
 Likewise our own kith and kin, could cause pain with acts of treachery”


இன்றெனது குறள்:

நிழல்நீரும் துன்புசெயின் துன்பதுபோல் உற்றோர்
உழற்பகையாம்  ஊறு செயின்

nizhalnIrum thunbuseyin thunbadhupOl uRROr
uzhaRpagaiyAm URu seyin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...