22nd Sep 2014
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
(குறள் 880: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)
உயிர்ப்ப - உயிரோடு
உளரல்லர் - வாழ்வருக்கு ஒப்பாகமாட்டார்
மன்ற - தெளிவாக
செயிர்ப்பவர் - பகைவர்
செம்மல் - செருக்கினை
சிதைக்கலாதார் - அழிக்காதவர்.
தமது பகைவரது செருக்கினை
தெளிவாக அழிக்காதவர் உயிரோடு வாழ்வருக்கு ஒப்பார் அல்லர். அவர் வாழ்க்கை முடிவுற்றதாகவே
கருதப்படும். சென்ற குறளின் கருத்தில் வருத்தும் என்பதைக்கூறி, இக்குறளில் பகையை உறுதியாக
ஒழிக்காதவர் தாம் அவராலேயே அழிக்கப்படுவார், அதனாலேயே அவர் உயிரோடு வாழாது மடிவார்
என்கிறார். பகையென்பது எத்தகைய திறத்தது என்பதைச் சொல்லி இவ்வதிகாரத்தை நிறைவு செய்கிறார்.
Transliteration:
Uyirppa uLarallar manRa seyirppavar
Semmal sidhaikkalA dhAr.
Uyirppa – Life
uLarallar – is lost ( for them)
manRa - clearly
seyirppavar - enemies
Semmal - might
sidhaikkalAdhAr – they destroy completely
Those who do not
clearly put an end of the enemies might, shall considered to have lost their
life. In the last verse valLuvar had said, that if the enmity was not nipped in
the bud, it would come back and hurt. In this verse, he gives the extreme
scenario of the same. If enemity is not quelled or enemies might is not
diminished, then it would amount to losing the life, both figuratively, and
literally. Such is the nature of enmity.
“When enemies might is not destroyed,
clearly, it is as good as dead, perished”
இன்றெனது
குறள்:
பகையோர் மிகைப்பை ஒடுக்கார் உயிர்க்கார்
நகைபட் டழிந்து படும்
pagaiyOr migaippai OdukkAr uyirkkAr
nagaipaT Tazhinu paDum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam