21st Sep 2014
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
(குறள் 879: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)
இளைதாக - பிஞ்சாக இருக்கையிலே
முள்மரம் - முள் மரத்தை
கொல்க - வெட்டி எறிந்துவிடவேண்டும்
களையுநர் - இல்லையெனில், அது களைபவரின்
கைகொல்லும் - கையினை
பதம் பார்த்து வருத்தும்
காழ்த்த இடத்து - வளர்ந்து
முற்றிய மரமானால்
பகையென்று சொல்லாமல்,
முள்மரத்தைவைத்து, பகையை எப்போது வெட்டியெறிய வேண்டும் என்பதை உணர்த்தும் குறள். முட்செடிகளை
அவை தோன்றியவுடன் களைவதே நல்லது. முட்கள் அவ்வளவாக வளர்ந்திருக்காது, குத்தினாலும்
கையைப் பதம் பார்க்காது. ஆனால் அதே முள்மரம் வளர்ந்து பெரிதானால், அதை களையவேண்டும்
என்று கைவைத்தாலும், அது கையை வருத்துகிற வகையில் பதம் பார்த்துவிடும்.
அதேபோலவே பகையை முளையிலேயே
கிள்ளியெறிந்து நீக்கிவிடவேண்டும். வளர்ந்தபின் நீக்குவோம் என்று வாளாயிருப்பது, பின்னர்
நீக்க முயற்சிக்கும்போது பெரிய துன்பத்தைத் தந்துவிடும்.
பழமொழிப்பாடலொன்று கீழ்வருமாறு
கூறுகிறது.
“எதிர்த்த பகையை இளைதாய
போழ்தே
கதித்துக் களையின் முதிராதே
தீர்த்து
நனி நயப்பச் செய்தவர்”
சீவகசிந்தாமணி கூறுவது:
“பஞ்சியின் மெல்லிதேனும்
பகை சிறிதென எண்ணவேண்டா - அஞ்சி தற்காத்தல் வேண்டும் அரும் பொருளாக என்றான்”.
Transliteration:
iLaidAga muLmaram kolga kaLaiyunar
kaikollum kAzhththa iDaththu
iLaidAga – when it is just a sprout
muLmaram – a tree with thorns
kolga – destroy it
kaLaiyunar – else, the person who tries to remove
kaikollum – his hand will be stung by the thorns
kAzhththa iDaththu – when the sprout turns to be big tree.
A thorny sprout
must be cut and removed out before it takes root to grow, and sting the hand
that tries to remove it later on – A metaphorical verse to hint an enmity must
be nipped in the bud also likewise. When there is sign of enmity from someone,
it must be quelled, instead of letting it grow; otherwise it shall grow to
dangerous proportions and shall bleedingly sting even if we try to get rid of
that.
A Cheevaga
ChinthAmani verse says not to under estimate the enemy thinking that he is
lighter than a cotton ball and must fear even that it as a power tool in the
hands of an enemy, that might be used to hurt. Another verse from pazhamozhi
nAnUru, exactly reflects the thought of this kuraL.
“Destroy before it turns a big tree, the
thorny sprout
Else
it will sting painfully If it grows with strong root”
இன்றெனது
குறள்(கள்):
முளைத்தவுடன் முட்மரத்தை வெட்டு வளர்ந்து
களையெடுப்பின் கையைக்குத் தும்
muLaiththavuDan muTmaraththai veTTu
vaLarndhu
kaLaiyeDuppin kaiyaikkuth thum
பிஞ்சிலேயே முள்மரத்தை நீக்குக அன்றியது
அஞ்ச வருத்தும் வளர்ந்து
pinjilEyE muLmaraththai nIkkuga
anRiyadhu
anja varuththum vaLarndhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam