செப்டம்பர் 20, 2014

குறளின் குரல் - 884

20th Sep 2014

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
                        (குறள் 878: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)

வகையறிந்து - வினையைச் செய்யும் வகையைச், செயலறிவை அறிந்து
தற்செய்து - அதைத் செவ்வனே ஆற்றுகின்ற திறனைப் பெருக்கிக்கொண்டு
தற்காப்ப - அதைச் செய்யும் போது இடையூறுகள் வராமல் தம்மைக் காத்துக்கொண்டால்
மாயும் - அழிந்துபடும்
பகைவர்கண் பட்ட - எதிர்வினையாற்றுகின்ற பகைவர்கள் கொண்ட
செருக்கு - அகந்தை (தாங்கள வலிமை மிக்கவர்கள் என்று நினைப்பது)

பகையின் செருக்கென்பது அது கொள்ளுகிற வலிமைத்திறத்தினால் வருவது.தம் வலிமையின் தமக்கு இருக்கும் மிகுந்த நம்பிக்கையும், அதேபோல, எதிர்ப்போரின் மென்மையும் நோக்கி வருவது அது. அத்தகைய பகையை வெல்லுவதற்கு ஆற்றக்கூடிய் வினை வகை இவையென்று அறிந்து, அவற்றைச் செய்யும் செயலறிவும் பெற்று, அவ்வினைகளை செம்மையாகச் செய்ய தம் திறமையை வளர்த்துக்கொண்டு, பிறகு அவற்றுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் காத்துக்கொண்டால், பகைவர்கள் கொண்ட அகந்தையானது தாமாகவே அழிந்துபடும் என்பதே இக்குறள் கூறும் கருத்து.

கி.வா.ஜவின் ஆராய்ச்சி உரை சில பழம் பாடல்களை, புறநானூறு, பழமொழி நானூறு மற்றும் கம்பராமாயணம் இவற்றிலிருந்து முற்றுக் கருத்தையும் ஒத்ததாக எடுத்துக்காட்டுகிறது. அவற்றுள் கீழ்வரும் பழமொழிப்பாடலின் இறுதி இரண்டு வரிகளும் மிகவும் அழகான்வை, பொருத்தமானவை.

̀நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்.

நெற்பயிரைச் செய்தலினால் வயலிலுள்ள புல் தானே அழிந்தாற் போல், தீராப்பகை, ஒருவன் தன்னை வலிமையுறச் செய்தலால் தானே அழிந்து விடும், இதிலேயே வகையறிந்து, தற்செய்து, தற்காத்து என்பவையெல்லாம் அடங்கிவிடுகின்றன.

Transliteration:

vagaiyaRindhu thaRcheidhu thaRkAppa mAyum
pagaivarkaN paTTa serukku

vagaiyaRindhu – knowing the ways of doing deeds
thaRcheidhu – developing the abilities to them well
thaRkAppa – and defending the self in execution
mAyum – will perish
pagaivarkaN paTTa – the enemies’
serukku – arrogance

Enemies’s arrogance is out of confidence about their strength and knowing the lack of the same, and weakness of the opponent. To win such an enemy and to perish his arrogance, one shall know the ways of his deeds, develop the abilities to do them well and also defend against any obstacles that may come from enemies, while executing. Combination of the above, will diminish the confidence of enemies to act against, which in turn will perish their arrogance, says this verse.

A verse in Pazhamozhi NanURu says it by citing the following: As we grow paddy crops, the weed will automatically perish. So will the long standing enemy, with fortification and strengthening of self”

Know the ways, develop the abilities, defend self!
Enemies’ arrogance will perish and be called bluff”

இன்றெனது குறள்:


செயலறிவு ஆற்றுதிறன் தற்காப்பு கொண்டால்
செயலிழக்கும் பற்றார் செருக்கு

seyalRivu ARRuthiRan thaRkAppu koNDAl
seyalizhakkum paRRAr serukku

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...