செப்டம்பர் 16, 2014

குறளின் குரல் - 880

16th Sep 2014

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
                        (குறள் 874: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)

பகை - பகைவரையும்
நட்பாக் - நட்புறவிலே இருப்பவராக மாற்றி
கொண்டொழுகும் - அவரை உறவாகக் கொண்டு இருக்கும்
பண்புடையாளன் - பண்புள்ளவர்கள்
தகைமைக்கண் - பெருமையிலே
தங்கிற்று உலகு - இவ்வுலகமானது நிலை பெறுகிறது.

இக்குறள் பகையின் வகையறிந்து, எத்தகைய பகையாயிருப்பினும், அப்பகை நிலையை மாற்றி அவரை நட்புறவினராக மாற்றும் ஆற்றலுள்ளவர்கள், பண்பு மிக்கவர்கள் என்று கூறி, அத்தகையோர் வாழும் பெருமையிலேதான் இவ்வுலகே நிலை பெறுகிறது என்கிறது.

பகையையும் நட்பாக மாற்றுகின்ற இயல்பு என்பது பண்பின் உச்சம்; சிலருக்கே அது இயல்பாகவுள்ள பண்பு. அத்தகையோர் இருப்பதால்தான் இவ்வுலகமானது, “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் மழை பெய்வது போல”, நிலை பெறுகிறது என்கிறார் வள்ளுவர்.

Transliteration:

pagainaTpAk koNDozhugum paNbuDai yALan
thagaimaikkaN thangiRRu ulagu

pagai – even the enemies
naTpAk – as friends
koNDozhugum – is able to transform and change
paNbuDaiyALan – such noble person
thagaimaikkaN – in his glory
thangiRRu ulagu – the world sustains

Because of the noble persons that have the glory of changing and transforming even the worst enemies,  this world sustain, says this verser. After all to have such great attribute, a person should be have extreme tolerance and only love towards the entire humanity.

Such a trait is the height of virtue and nobility. Only a few have it naturally. As they say, it rains because of even one good person on this earth, only with people of utmost nobility, virtuous demeanor, the world truly sustains.

“Noble persons that can transform their enemies
 to friends, sustain the world with their greatness”

இன்றெனது குறள்:

ஏதிலார்தம் நட்புறவும் ஏற்கும் தகையுளோரால்
கோதின்றி வாழும் உலகு

EdhilAratham naTpuRavum ERkum thagaiyuLOrAl

kOdhinRi vAzhum ulagu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...