செப்டம்பர் 17, 2014

குறளின் குரல் - 881

17th Sep 2014

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
                        (குறள் 875: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)


தன் துணை இன்றால் - தனக்குத் துணை வருவோர் என்று யாரும் இல்லாமல்
பகை இரண்டால் - பகைவர் இருவர் இருந்தால்
தான் ஒருவன் - தான் தனியனாயினும்
இன்துணையாக் - தம்முடைய நட்புறவாக, நல்ல துணையாகக்
கொள்க  - அமைத்துக் கொள்ளவேண்டும்
அவற்றின் ஒன்று - அவர்களுள் ஒருவரை (அவர்களை இணை பிரித்தாகிலும்)

ஒருவன் தனக்கென்று ஒரு துணையுமில்லாதவனாயும், ஆனால் இரண்டு பகைவரைக்கொண்டவனாகவும் இருந்தால், தான் தனியனாக இருப்பினும் அவர்களுள் பொருந்திய ஒருவரை தமக்குத் துணையாக தற்காலிகமாகவேனும் கொள்ளுதலே நன்று, அறிவுடைமை. இதுவே இக்குறள் உணர்த்தும் பொருள்.

தமது இரு பகைவரும் நட்புறவில் இருப்பின், யார் அவற்றுள் தம்மை  ஓரளவுக்குப் பொருந்துவாரோ, அவரை நட்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது பிரித்தாளும் சூழ்ச்சியாவது மேற்கொண்டு அவர்களுள் பொருந்திய ஒருவரை நட்பாகக் கொள்ளவேண்டும். அவர்களுக்குள்ளும் பகையிருந்தால், ஒருவரை நட்பாகக் கொள்ளுவது எளிதே.

Transliteration:

thanthuNai inRAl pagaiyiraNDAl thAnoruvan
inthunAiyAk koLgavaRRin onRu

than thuNai inRAl – Without any support for self
pagai yiraNDAl – but having two enemies
thAn oruvan – even being alone
inthunAiyAk – as good friend and support
koLga – must have (transform)
avaRRin onRu – one among those two enemies (even by separating them)

A person without any support and being alone, if has two enemies, must make one of them as his friends for his own good; it is prudent as well as good for his well being, though may be temporary in nature, hints this verse.

If there are two enemies, a person should find whoever is congenial in some aspects as his friend. Though that may be wise, sometimes, congeniality alone guarantees safety. Overall might and strength of all aspects may need to be evaluated also. It may become necessary to employ the age-old wisdom of  “divide and conquer” to create enmity between those two and take advantage of that, if they enemies are friends among themselves.

“Being alone, without support, when have two enemies, prudent
 it is to make friends with one of them, even faking it to be ardent”

இன்றெனது குறள்:

துணையில் தனியொருவன் ஒண்ணார் இருவர்

இணைபிரித்து கொள்ளொருவர் நட்பு

thUNaiyil thaniyoruvan oNNAr iruvar
iNaipiriththu koLLoruvar naTpu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...