செப்டம்பர் 15, 2014

குறளின் குரல் - 879

15th Sep 2014

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
                        (குறள் 873: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)

ஏமுற்றவரினும் - மதி மயக்குற்ற பித்தரினும்
ஏழை - அறிவற்ற மூடராம் (யார்?)
தமியனாய்ப் - தமக்கொரு துணையென்று யாருமில்லாத திக்கற்றவனாய்
பல்லார் - பல்லோருடைய
பகை கொள்பவன் - பகையினையும் பெற்ற ஒருவன்

தமக்கென்று ஒரு துணையுமில்லாமல் திக்கற்றவனாய், இருந்தும், பலருடைய பகையையும் பெற்ற ஒருவனை விட மதி மயக்குற்ற பித்தரிலும் மூடர் என்கிறது இக்குறள்.

துணையிருந்தாலும் பகைவரைப் பெறுதல் அறிவீனம்.  அப்படித் தமரென்று இல்லாமல் இருந்தும், எல்லோரோடும் பகையில் உள்ளவரை மதிமயக்கத்தில்  என்ன செய்கிறோம் என்று தெரியாதவரைவிட அறிவீனர் ஒருவரும் இல்லை என்று அத்தகையோரோடு கொள்ளும் பகையினைப் பற்றி கூறுகிறார் வள்ளுவர்.

Transliteration:

EmuR Ravarinum Ezhai thamiyanAip
pallAr pagaikoL bavan

EmuRRavarinum – worse than man menyally mad, insane
Ezhai – poor in foolishness
thamiyanAip – though is without any support for self
pallAr – many persons’
pagai koLbavan – a person that secures only their enmity of (many)

Though without any support from anyone, if a person earns only enmity of many, then there is none worse fool than even a mentally insane person, says this verse.

Even if there is sufficient support it is wrong to earn enmity of people. But to earn only enmity of many despite none being support is utter foolishness, worse than that of mentally unbalanced, insane people. At least in the later case, there is an excuse; but knowingly that who earns enemies cannot be a person with sanity – says vaLLuavr, about the enmity of such nature.

“There is none worse foolish than even an insane

 person, if he earns enemies with support of none”


இன்றெனது குறள்:


பித்தரிலும் மூடனாம் திக்கற்று யாரோடும்
ஒத்துவாழான் ஒட்டியொழு கான்

piththarilum mUDanAm thikkaRRu yArODum
oththuvAzhAn oTTiyozhu gAn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...