செப்டம்பர் 14, 2014

குறளின் குரல் - 878

14th Sep 2014

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
                        (குறள் 872: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)

வில்லேர் உழவர் - வில்லை ஏராகக் கொண்டு போர்க்களத்தை உழக்கூடிய வீரர்களின்
பகைகொளினும் - பகையினை ஒருவன் கொள்வானாயினும்,
கொள்ளற்க - கொள்ளக்கூடாதவொன்று
சொல்லேர் உழவர் - சொல்லெனும் ஏரினைப் பூட்டி, நன்கு பேசத்தெரிந்த கற்றோர்களின்
பகை - பகையினை.

வில்லென்பது படைக்கலன்களுக்காகப் பொதுவாகச் சொல்லப்பட்டது இக்குறளில். படைக்கலங்களோடு போர்க்களமாகிய வெற்றி விளைக்கும், பகை களையும் நிலத்தினை உழக்கூடிய வீரர்களின் பகையினைகூட ஒருவன் கொள்ளலாம். ஆனால் சொல்லெனும் ஏரினைப் பூட்டி அறிவென்னு நிலத்தை உழுகின்ற கற்றோர்களின் பகையினை உறுதியாகக் கொள்ளக்கூடாது, என்கிறது இக்குறள். அதாவது பகையின் திறமறிந்து கொள்ளுதலை, வீரத்தைவிட, கற்றோரிடம் பகைகொள்ள சிந்திக்கவேண்டுமென்பதை அடிக்கோடிடும் குறள்.

Transliteration:

vilEr uzhavar pagaikoLinum kOLLaRka
sollEr uzhavar pagai

vilEr uzhavar – that who plough the battlefield with their arsenal (bow is referred here)
pagaikoLinum  - even if their enmity is earned
kOLLaRka – never earn
sollEr uzhavar – those who are knowledgeable and equipped with the power of words
pagai – their enmity

In this verse, the word “vil” (bow) is used in general for arsenal. Even if one earns the enmity of valorous ones that can win in the battlefield with their arsenal, he must not even think of doing the same with knowledgeable people of extremely sharp intellect and word power. In stressing the assessment of enemies, it is prudent to think about the intellect of the opponent, hints this verse.

“Never earn the enmity of people of sharp intellect and the power of words
 though, earn the enmity of valorous warriors with arsenal of mighty swords”


இன்றெனது குறள்:

படைக்கலம் கொண்டோர் பகையேமேல் வாய்ச்சொல்
உடைத்தார் பகைகொளலி னும்

paDaikkalam kONDOr pagaiyEmEl vAichchol
uDaiththAr pagaikoLali num

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...