88: (Assessing Enemies - பகைத்திறந்தெரிதல்)
[This
chapter is about knowing the state and nature of the enemy and taking
appropriate course of action. Making enemies, making friends with previous
enemy as needed, ignoring enemies as required, and be completely removed from
enemies in some cases are all different ways of dealing enemies. This requires
savvy analysis and assessment of enemies. The chapter, also discusses when to
be rid of enemies and what disgrace it is, not to be rid in some cases. All
these come under the major heading of assessing enemies]
13th Sep 2014
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
(குறள் 871: பகைத்திறந்தெரிதல் அதிகாரம்)
பகை என்னும் - பகையென்னும் பிறரை வெறுப்பதாகிய
பண்பிலதனை - பண்பற்ற
குணத்தினை
ஒருவன் - ஒருவன்
நகையேயும் - வேடிக்கைக்காகக்
கூட
வேண்டற்பாற்று அன்று - விரும்பக்கூடாது
பிறரை வெறுப்பதும், அழிக்கத்தூண்டுவதுமான,
பகையென்பது பண்பிற்கொவ்வாதது; அதனால் வெறும் விளையாட்டுக்குக்கூட ஒருவர் அதை விரும்பக்கூடாது
என்கிறது இக்குறள். பகை கொள்ளுதல் என்றுமே தீமையே பயப்பதால், அது பண்பற்றதாகிறது. அதை
விளையாட்டுக்காகவே கொண்டாது, அது வினையாகி விடக்கூடுமாதலால், அதை வேடிக்கைக்காகக் கூட
கொள்ளக்கூடாது என்று சொல்வதன் மூலம், பகையென்பதன் தீத்திறத்தை தெளிவாகக் காட்டும் குறள்.
Transliteration:
Pagaiyennu paNibi ladanai oruvan
nagaiyEyum vENDaRpARRu anRu
Pagaiyennu - Enmity that which
paNibiladanai - is not a virtue to have (evil)
oruvan - a person
nagaiyEyum - even for playful cheer
vENDaRpARRu anRu - shall not desire
That which detests and nudges to destroy is, enmity, and it is definitely
not a desirable virtue. Hence, even for playful cheer, a person shall not
indulge in enmity, says this verse. Enmity leads to evil and destruction; hence
it is evil by nature. Enmity even playfully, can yield unintended, bad results;
hence it must be avoided. This verse succinctly underlines the evil nature of
enmity
“Desire not even for a playful cheer
The evil virtue that
enmity is, never!”
இன்றெனது குறள்:
பண்பில் பகையை ஒருவர் விளையாட்டாய்
எண்ணியும் செய்யாமை நன்று
paNbil pagaiyai oruvar viLaiyATTAi
eNNiyum cheyyAmai nanRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam