12th Sep 2014
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
(குறள் 870: பகைமாட்சி அதிகாரம்)
கல்லான் - கற்றறியா மூடனை
வெகுளும் - கோபிப்பதாய
சிறுபொருள் - சிறு
ஆதாயத்தை
எஞ்ஞான்றும் - எப்போதும்
ஒல்லானை - பகையானை
ஒல்லாது - இயலாது
ஒளி - புகழ்
குறள்வழியே சென்று பொருள்
செய்வதற்குக் குழப்பமான குறள் என்பது பலருடைய உரைகளைப் படிக்கையிலே விளங்குகிறது. பரிமேலழகர்
உரையை ஒட்டியே பெரும்பாலும் உரைகள் இருப்பதால், இந்த குழப்பத்தையே பலரும் தொடர்ந்துள்ளனர்.
குறள் வழியே சென்று பொருள்
கூற வேண்டுமாயின், ஒரு மூடன் கோபிக்கும் சிறிய, எளிய பொருள்களையெல்லாம் எப்போதும்,
பகையானை இயலாது புகழ் என்று ஆகும். இது சொற்றொடராகக்கூட சரியாக இல்லை. கல்லானை வெகுளும் என்று இருப்பின்
பொருள் பொருந்தி வருவதைக் காணாலாம். இவ்வாறு “ஐ” விகுதி இல்லாத சொற்களை, தளை ஒழுங்குக்காக,
சில குறள்களில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். கீழ்கண்டவாறு பொருள் கூறுதல் ஓரளவுக்குப்
பொருந்துகிறது.
கற்றறியா மூடரை ஒருவர்
பகைத்து சீறுவதால் சிறு ஆதாயம் கூட கிடைக்கலாம். ஆனால் அதில் சிறப்பென்ன இருக்கமுடியும்?
அத்தகைய சிறு ஆதாயங்களைப் பகையாகக் கொள்ளாதவனை (அவற்றைத் தமக்கு தகுதியான பகையில்லை
என்று தள்ளாதவனை) புகழ் சேராது. இதனால் பகைமையிலே மாட்சி இன்றியமையாதது என்று சொல்லி அதிகாரத்தை நிறைவு செய்வதாகத்தான்
தோன்றுகிறது.
பரிமேலழகர் உரையில் மற்ற
உரையாசிரியர்களை இடித்துக் கூறும் விதமாக, “இதற்குப் பிறர் எல்லாம் அதிகாரத்துக்கு
மாறாதல்மேலும் ஒரு பொருள் தொடர்புபடாமல் உரைத்தார்.” என்கிறார். மணக்குடவர் முற்றிலுமே
பொருந்தவில்லை. மற்றவர்கள் உரைகளுக்கான அடித்தளம் புரியவில்லை.
Transliteration:
kallAn veguLum siRuporuL enjAndRum
ollAnai olla dhoLi
kallAn – uneducated fool
veguLum – being angry with him
siRuporuL – whatever little benefits that may yield
enjAndRum - always
ollAnai – never be an enemy to that (those little benefits)
olladh(u) – is not possible to get
oLi – fame, glory
Reading some of the
commentaries for this verse, it is apparent that it has been a daunting task to
many commentators. This is because, most of them have tried to make sense out
of Parimelazhagar’s commentary, which is at best, only more confusing.
MaNakkuDavar is even worse and entiredly misleading.
Interpretation of
this verse as we read, goes like this: “a person that is not against the little
benefits (objects) that a fool is angry with will not get glory” – which makes
no sense, even as a sentence. Sometimes, vaLLuvar to keep the poetic bind of
words in tact, uses words without appropriate endings (poetically admissible).
For example, in this verse, the word
‘kallAn” should have been with “kallAnai”.
Here is an attempt
to see the meaning of the verse as vaLLuvar probably intended.
“Opposing the
fools, a person may get little benefits or objects; but how glorious can they
be? One who does not discard such small benefits obtained by opposing fools,
shall not have any glory - is the underlying thought of this verse.
Parimelazhagar also
blames other commentators for having interpreted this verse contrary to the
overall intent of the chapter, while the truth is that his own commentary is
equally not enlightening.
“A
person that does not let go of small benefits
of enmity with fools will not get glory that
befits”
இன்றெனது குறள்:
மூடனை ஒல்லும் சிறுமைதனை நீங்கானை
கூடலென்றும் இல்லை புகழ்
mUDanai ollum siRumaithanai nIngAnai
kUDalenRum illai pugazh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam