11th Sep 2014
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
(குறள் 869: பகைமாட்சி அதிகாரம்)
செறுவார்க்குச் - எதிர்த்து
வருவோர்க்கு
சேண் - உயர்ந்து, சுவர்கம் போன்று
இகவா - நீங்காத, அகலாத
இன்பம் - இன்பத்தைத் தருவது,
அறிவிலா - மதியற்று
அஞ்சும் - அல்லும்
எல்லாவற்றுக்கும் அஞ்சுகின்ற கோழையான
பகைவர்ப் பெறின் - பகைவரைப் பெற்றால்.
ஒருவரை எதிர்ப்போர்க்கு, அந்த ஒருவர் மதிமிக்கவராயும், அஞ்சா நெஞ்சராயும் இருப்பின்,
எதிர்ப்பது எளிதாக இயல்வதல்ல. எதிர்க்கும் பகையோ அறிவுத் திண்மையும் இன்றி, எல்லாவற்றுக்கும்
அஞ்சுகின்ற கோழையாகவும் இருந்துவிட்டால், அது உயர்ந்து, சுவர்க்த்தையொத்த, நீங்காத
இன்பத்தைத் தருவது என்கிறார் வள்ளுவர் இக்குறளில்.
மீண்டும் அதிகாரத் தலைப்பைப் பற்றிய ஒரு ஐயம்; இக்குறளில் ஏற்கனவே எத்தகையாலும்
மாட்சி இல்லாத பகையை வெல்வது செறுவோர்க்கு, அதாவது எதிர்த்து போர் புரிவோர்க்கு இன்பம்
என்கிறார். செத்துவிட்ட பாம்பை அடிக்க வருவதை எப்படி மாட்சிமை மிக்க செயலாகக் கொள்ள
முடியும்? இக்குறளில் இயலாத பகைக்கும், எதிர்ப்போர்க்கும் என்று இருபக்கத்திலும் மாட்சிமை
தெரியவில்லையே! அதுவும் சேண், இகவா என்ற இரு
சொற்களுமே சுவர்கத்தை ஒத்த, உயர்ந்த, அகலா
என்று இன்பத்தை உச்சாணிக் கிளையிலே வைக்கும் அளவுக்கு, எதிர்ப்போரின் வீரத்திலும் உயர்வு
இல்லை, அவர்கள் இன்பமும் வெற்றியென்பதானால், அகலாததும் இல்லை.
ஒருவேளை இவையெல்லாம் இடைச் செருகல்களோ?
Transliteration:
seRuvArkkuch chENigavA inbam aRivilA
anjum pagaivarp peRin
seRuvArkkuch – for those that oppose in (war)
chEN - heavenly
igavA – long standing
inbam – happiness, pleasure
aRivilA - ignorant
anjum – and fearful (of everything)
pagaivarp peRin - enemy, if they get.
For a person, that
opposes another, if that other person is intelligent, and courageous, to win
over his is not an easy task. On the contrary, if that person is ignorant and
soaked in cowardice, then it gives, long standing, heavenly pleasure and
happiness, says vaLLuvar, in this verse.
Once again, here is
a verse that evokes doubt about the validity of the chapter title fitting the
verse. Being ignorant and cowardly is not graceful or prideful. To win against
such an opponent is not glory either. It as shameful as beating a dead
snake. This verse suggests no pride for
either side. The words suggest happiness
that is heavenly and long standing that are not substantiated at all. There is
no heavenly happiness in this time of valor, nor such victory is worth
celebrating as long standing.
“For opponents, it is heavenly and
longstanding pleasure
having
enemies,that are ignorant and cowardly- a treasure “
இன்றெனது குறள்:
மதியற்று அல்லுமச்சங் கொள்ளும் பகையே
எதிர்போர்க் குயர்ந்தகலா இன்பு
mathiyaRRu allumachchang koLLum pagaiyE
ethirppOrk kuyarndagalA inbu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam