செப்டம்பர் 10, 2014

குறளின் குரல் - 874

10th Sep 2014

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு 
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
                  (குறள் 868: பகைமாட்சி அதிகாரம்)

குணன் இலனாய்க் - நற்பண்புகளே இல்லாதவனாய்
குற்றம் பலவாயின் - பாவம் தரும் பல குற்றங்களில் உழலுபவன்
மாற்றார்க்கு - பகைவர்க்கு (பற்றலர்க்கு)
இனன் இலனாம் - உறவும் துணையும் இல்லாத தனிமரமாம்
ஏமாப்பு உடைத்து - பகைவர்க்கு வெற்றியைத் தரக்கூடிய பாதுகாப்பைப் போன்றோன் (பகைவர்க்கு வெற்றிக்கு உறுதி கூறுபவன்)

நற்பண்புகள் இல்லாதவனும், பாவம் தரும் பல குற்றங்களில் உழலுகின்றவனும், பகைவர்க்கு உறவும் துணையும் இல்லாதவனாக, பகைவர்க்கு வெற்றியை உறுதியாகத் தரக்கூடிய பாதுகாப்பைப் போன்றவன். “இந்தா கொள்” என்று தம் பகைவர் வெற்றிக்கு அவனது இயல்பால் அவனே பாதுகாப்பாக இருக்கிறான் என்று வஞ்சப்புகழ்ச்சி அணியாகச் சொல்லப்பட்டக்குறள். வள்ளுவருக்கு இதுபோன்ற குறும்பு அரும்புவதை அங்கங்குப் பார்க்கலாம். 

Transliteration:

guNanilanAik kuRRam palavAyin mARRArkku
inanilanAm EmAp puDaiththu

guNan ilanAik – without good virtues
kuRRam palavAyin – having many faults ( a person)
mARRArkku – for the enemies
inan ilanAm – is friendless, companionless (very obviously)
EmApp(u) uDaiththu – is like a safeguard for enemies (to win it without much effort, by defeating)

A person without good virtues, and has many sinful faults, will be without friends and trust worthy companions. He is like a safeguard for his opponents or enemies to grab a win, as if he says, “Here, take it”, to his enemies. vaLLuvar seems to indulge in artful censure slipping in it as a praise in a few places, showing his fine sense of humor and  mischievous streak.

Vritueless, full of faults, a person is like a safeguard
  for enemies to defeat him easily, in his own yard"

இன்றெனது குறள்:

பண்பிழந்து பாவத்தில் பாழானோர் பற்றலர்க்குக்
திண்துணை அற்றார்வீழ்த் த

paNbizhandu pAvaththil pAzhAnOr paRRalarkkuth
thinthuNai aRRArvIzhth tha

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...