9th Sep 2014
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
(குறள் 867: பகைமாட்சி அதிகாரம்)
கொடுத்தும் - ஏதேனும்
விலை கொடுத்தும்
கொளல் வேண்டும் - கொள்ள
வேண்டும்
மன்ற - தெளிவாக
அடுத்திருந்து - உடனிருந்தே
மாணாத - ஏற்புடையன
அல்லாதவற்றை
செய்வான் - செய்கின்றவனுடைய
பகை - பகைமையை.
குறிப்பறிதல் அதிகாரத்திலும், நட்பாராய்தல் அதிகாரத்திலும் “குறிப்பிற்
குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும்
கொளல்” என்று குறிப்புணர்வாரை அணுக்கமாகக்
கொள்ளுதலைப் பற்றியும், “குடிப்பிறந்து தன்கண்
பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு” என்று பழிநாணுவாரை நட்பாகக் கொள்ளுதலைப் பற்றியும்
ஏதேனும் பொருள் கொடுத்தாகிலும் கொள்ளவேண்டும் என்றது போல், இங்கு சிலருடைய பகையைப்
பொருள் கொடுத்தாகிலும் தேடிக்கொள்ளவேண்டுமென்று கூறுகிறார். தம்முடைய அருகிலிருந்து
கொண்டே ஏற்பில்லாதவற்றை செய்கின்றவனுடைய பகைமையை ஏதேனும் விலை கொடுத்தாகிலும் கொள்ள
வேண்டும் என்று சொல்லுகிறார் வள்ளுவர்.
Transliteration:
koDuththum koLalvENDum manRa aDuththirundu
mANAda seivAn pagai.
koDuththum – even give some price
koLal vENDum – one must have
manRa - clearly
aDuththirundu – one who is by the side
mANAda – that which is not proper
seivAn - does
pagai – his enmity
In earlier chapters
of knowing the right friends, understanding what is desired even without a word
spoken, vaLLuvar insisted on getting close to such people, even giving a price.
Similarly he advocates securing the enmity of people that though being next and
pretentiously close, do what is improper and shameful, even by giving any price
to make sure that enmity. So to fight them and defeat them is prideful and justified.
“Even by giving any price, one must secure as
an enemy,
a pretentiously
close person, that does act hatefully”
இன்றெனது குறள்:
அருகிருந்து ஏலாது செய்வோனைக் கொள்க
பொருள்தந்தும் ஒட்டானாய்ப் பெற்று
arugirundu ElAdu seivOnaik koLga
poruLthandum oTTAnAip peRRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam