செப்டம்பர் 08, 2014

குறளின் குரல் - 872

8th Sep 2014

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
                        (குறள் 866: பகைமாட்சி அதிகாரம்)

காணாச் - தாம் கொள்ளும் சினத்தால் உறுபயனும், யார் மீது கொள்ளுகிறோம் என்றும் எண்ணிப்பாராமல்
சினத்தான் - சீற்றம் கொள்ளுபவனும்
கழிபெருங் - தீராது மிகுந்த
காமத்தான் - வேட்கை உடையவனும் (பேராசை எல்லாவற்றிலும் உடையவன்)
பேணாமை - பகையை
பேணப்படும் - விரும்பி கொள்ளப்படும் (இத்தகு பகையான, பகையென்ற சொல்லுக்கு மாட்சித் தருவது)

இக்குறள் இவ்வதிகாரத் தலைப்பினை தெளிவாக்குகிறது, எத்தகையப் பகையை மாட்சிமை பொருந்திய பகையாய் விரும்பிக் கொள்ளலாம் என்று. தாம் கொள்ளும் சீற்றத்தினால் உறுபயனும், அதை யார் மீது கொள்ளுகிறோம் என்றும் எண்ணிப்பாராமல் பெருங்கோபத்தில் உழல்பவனும், தீராத, அளவுக்கு மிஞ்சிய வேட்கை உடைய பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை, கொள்ளத்தக்கப் பகையாக் கருதலாம் என்று பகையென்ற சொல்லுக்கு மாட்சிமை தருவதென்பதெது என்று விளக்குகிறார் வள்ளுவர்.

மகாபாரதத்தின் துரியோதனனை நினைவுபடுத்தும் குறள். பாண்டவர்மேல் பொறாமையின் காரணமாக அவன் கொண்ட கோபமும், அதில் பாண்டவர் பக்கம் இருக்கும் துணை யாரென்றும் எண்ணிப்பாராது இருந்தமையும் தெரிந்ததுதான். மூத்தவனும், அரசுரிமைக்கு அதிகாரம் பெற்றவனுமான தருமன் இருக்கையிலே, ஊசிமுனையளவுக்குக் கூட நாட்டுரிமை பாண்டவர்க்குக் கூடாது, நாடு முழுவதும் தமக்கே வேண்டுமென்ற அவனது பேராசையும் அத்தகைய பகையை பாண்டவர் விரும்பி ஏற்றதற்கான காரணத்தை கூறி, அப்பகையை மாட்சிமை படுத்துகின்றன.

Transliteration:

kANAch chinaththAn kazhiperung kAmaththAn
pENAmai pENapp paDum

kANAch – Not thinking about why and with whom to get angry
chinaththAn – the one who is in perpetual anger with everything, everybody
kazhiperung – having excessive
kAmaththAn – lust for everything
pENAmai – his enmity
pENapppaDum – is highly desired.

This verse clarifies the topic heading for this chapter. Which type of enmity is desirable and is justified to have? When a person does not control his anger not knowing for what and with who, he is angry and when he has excessive lust for everything, his enmity is desirable and justified to have; it is indeed a pride too.

This verse reminds us of the DhuryOdhanA of MahabhAratA. Due to his excessive jealousy, he had excessive anger towards pANDavAs, coveted what is theirs in land and wealthu by trickery; his anger did not even let him see who was on his side and what their actual strength was; his excessive lust for the rule and the land, did not allow him to share even a pin-head sized land with his cousins. Such enmity is worth having and is prideful.

“A person blinded by rage of anger, driven by excessive lust
 is worth having enmity with and is considered pride’s behest


இன்றெனது குறள்:

எண்ணாது சீறுவோன் குன்றாத வேட்கையன்
ஒண்ணாப் பகையென்றா கும்

eNNAdu sIRuvOn kunRAdha vETkaiyan
oNNAp pagaiyenRA gum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...