7th Sep 2014
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
(குறள் 865: பகைமாட்சி அதிகாரம்)
வழிநோக்கான் - நல்ல பாதையை பாராதவன்
வாய்ப்பன செய்யான் - தமக்கு
கிடைக்கும் வாய்ப்புகளை சரிவர பயன் படுத்திக்கொள்ளாதவன்
பழிநோக்கான் - சில
செயல்களைச் செய்வதால் பழி ஏற்படுமென்று பாராதவன்
பண்பிலன் - நற்பண்புகளை
அறவே இல்லாதவன்
பற்றார்க்கு - பகைவர்களுக்கு
இனிது - இனிமையானவன்,
ஏனெனில் இத்தகையவர்களை வெல்லுதல் பகைவர்க்கு எளிது.
நல்வழி ஈதென்று தெரிந்தும்
அப்பாதையைப் பாராதவனாய் இருப்பவன், தமக்குக் கிடைக்கும் அருமையான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாதவன்,
சில செயல்களைச் செய்வதால் பழி ஏற்படுமே என்று அஞ்சாதவன், நற்பண்புகளை அறவே அற்றவன்
ஆகிய ஒருவன் பகைவர்க்கு மிகவும் இனிமையானவனாம். ஏனெனில் அவனை வெல்லுதல் பகைவர்க்கு
எளிதல்லவா?
பகைமாட்சி என்பதைப் பற்றிய
பரிமேலழகர் உரைவிளக்கம், குழப்பமானது. மணக்குடவர் ஒருவர் தமக்கு நன்மை பயக்குமாறு கொள்ளும்
பகையை, பகைமாட்சி என்கிறார். பரிதியார், பகைமாட்சியானது, பகை வாராத வழியைச் சொல்வது
என்கிறார். எல்லாமே அதிகாரத் தலைப்பை சரிவர விளக்கவில்லை. சென்ற குறளையும், இக்குறளையும்
நன்கு பார்த்தால், இவை பகைவருக்கு மாட்சிமை தருவது எவை என்று பட்டியலிடுவதாகத் தெரிகிறது.
Transliteration:
vazhinOkkAn vAippana seyyAn pazhi nOkkAn
paNnbilan paRRArkku inidhu
vazhinOkkAn – will not look at the good ways shown to him
vAippana seyyAn – will not make use of the good opportunities
that come his way
pazhi nOkkAn – will not even look at the blame for the
deeds he indulges
paNnbilan - characterless
paRRArkku – for enemies ( a person of one or more of the
above traits)
inidhu – is endearing (as he is easy to defeat)
Knowing the good
path, a person who refuses to see it, that one who does not make use of golden
opportunities presented to him, that
who is not fearful
of shameful of blemishes, that who lacks good virtues – with any or all of such
faults a person is so endearing to enemies as he becomes the appropriate and
easy target to defeat.
Parimelazhagar’s
explanation for the chapter heading is confusing to put it mildly. Manakkudavar
says, that which brings and does good is noble enemity. Anotherr commentator ParidhiyAr, says that it
is collective ways of preventing enmity. None of these seem to make proper
sense with the oxymoronic coinage, probably perplexed as to how these words are
together in the first place. Perhaps the
intended meaning is to explain what would really give reason and even justify
the enmity. Though there is no real pride or nobility in enmity, even that can
be justified, if it is with people of the faults listed through various verses
of this chapter.
“No right paths he
sees, nor takes the right opportunities, never shameful of blames,
nor has any virtues of good, a person is an
endearing and an easy target for enemies
இன்றெனது குறள்:
பாதை பழியிரண்டும் பாரான் வருவசெய்யாப்
பேதை பகைவர்க் கினிது
pAdhai pazhiyiraNDum pArAn varuvaseyyAp
pEdhai pagaivark kinidhu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam