செப்டம்பர் 06, 2014

குறளின் குரல் - 870

6th Sep 2014

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
                        (குறள் 864: பகைமாட்சி அதிகாரம்)

நீங்கான் வெகுளி - சினந்து அதிலிருந்து நீங்காதவன்
நிறையிலன் - தம் உள்ளத்தடக்கம் கொள்ளாதவன், பொறுமை
எஞ்ஞான்றும் - எப்போதும்
யாங்கணும் - எங்கும்
யார்க்கும் - எவர்க்கும்
எளிது - எளிதாம் (எதற்கு? அவனை வெல்ல)

எப்போதும் யாவரையும் சினந்து, அதிலிருந்து நீங்காதவனும், மனமடங்கி பொறுமை கொள்ளாதவனுமாகிய ஒருவனை யார்க்குமே, எந்தவொரு இடத்திலும், எப்போது வேண்டுமானாலும் வெல்லுதல் என்பது எளிது. யாவர்க்கும் என்றதனால், பகைவருக்கும் என்றாகிறது,

இக்குறளுக்கும் இவ்வதிகாரத்துக்கும் என்ன தொடர்பு என்ற ஒரு கேள்வி மீண்டும் வருகிறது, மனதை வறுக்கிறது. பகையும் மாட்சியுமே முரண் தொடையாக தோன்றுகின்றன. பகையில் மாட்சிமையுள்ள பகை, அல்லாதது என்று உண்டா? இருப்பினும் சிலவித பகைகளில் அவ்வாறு இருப்பதாகக் கொண்டாலும், இக்குறளைப் பொருத்தவரையில் அது தெளிவாகவில்லை; அதிகாரத் தலைப்புக்கும் சற்றும் பொருந்தவில்லை. தவிரவும் திருக்குறளல்லாது வேறு எங்கேனும் இக்குறள் வந்திருந்தால், கற்றோர்கள் இக்குறளை ஒரு பொதுக்கருத்துக் குறளாக வேண்டுமானால் பார்த்திருப்பர்.

Transliteration:

nIngAn veguLi niRaiyilan ennjAnRum
yAngaNum yArkkum eLidhu

nIngAn veguLi – one who does quit being angry
niRaiyilan – who does not have his mind under control, or patience
ennjAnRum – always
yAngaNum – anywhere
yArkkum – for anybody
eLidhu – is easy (for what? To win over)

Always angered, not having the control of mind and hence patience, a person is easily winnable for anyone, anywhere and always. Since it is said, “by anyone”, it includes the enemies too.

Once again, the question of why this verse is pertinent to this chapter is anyone’s guess. Nobility in enemity is oxymoronic. Though we try to make sens out of this in a roundabout away, it definitely does not fit the chapter heading for sure. If this verse had appeared as a standalone verse, would not have been considered as a meaningful verse at all. At best, the verse may be considered preaching general good versus bad.

“Clouded by anger always, without the virtue of patience, a person
 is winnable always, anywhere, and for anyone for no specific reason”


இன்றெனது குறள்:

வெங்கணோடு உள்ளமடங் கான்வெல்ல எப்போதும்
எங்கும் எவர்க்கும் எளிது

(வெங்கண் - சினத்தால் சிவந்த கண்; உள்ளம் அடங்காமை - நிறைவின்மை )

venkaNODu uLLamaDang gAnvella eppOdhum
engum evarkkum eLidhu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...