செப்டம்பர் 05, 2014

குறளின் குரல் - 869

5th Sep 2014

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
                        (குறள் 863: பகைமாட்சி அதிகாரம்)

அஞ்சும் - எல்லாவற்றுக்கும் பயப்படுகின்றவன், கோழை
அறியான் - அறியாமையில் உழலும் மூடன்
அமைவிலன் - யாரோடும் இணக்கமாயில்லாதவன்
ஈகலான் - ஒருவருக்கும் எதுவும் ஈயாதவன்
தஞ்சம் - மிகவும் வலியீனம் உடையவனாகி
எளியன் - எளியனாம் (வெல்லுதற்கு)
பகைக்கு - பகைவர்களுக்கு,

எது பகைவர்களுக்கு வெல்லுதற்கு எளிய பகையென்பதைக் கூறும் குறள். எல்லாவற்றுக்கும் அஞ்சி நடுங்கும் கோழை, அறிய வேண்டுவனவற்றை அறியாது பேதையாயிருக்கிறவன், ஒருவரோடும் இணங்கிச் செல்லும் தன்மையில்லாதவன், ஒருவருக்கும் எதுவும் கொடுத்துதவாதவன் என்று ஒவ்வொரு பண்புக்கேடுமே ஒருவனைப் பகைவர்களால் எளிதாக வெல்லத் தக்கவனாக்கிவிடுகிறது.

இவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட, அல்லது எல்லாப் பண்புக் கேடுகளுமே ஒருவனிடம் இருந்தால், அவனை பஞ்சைவிட இலகாக ஊதித்தள்ளும் இலக்காக கொள்வர் பகைவர். அவர்கள் பஞ்சையாயும் இருப்பதால் (வரியன், உதவாக்கரை), அதுவே அவர்களை வெல்ல ஏதுவாகிறது என்று சுட்டுகிறார் வள்ளுவர்.

இக்குறள் பகைமாட்சியை எவ்வாறு குறிக்கிறது என்று தோன்றலாம். பண்புக்கேடுகளின் ஒட்டுமொத்தமாக இருக்கும் ஒருவனோடு பகை கொள்ளுதலே ஒருவர்க்கு ஏற்புடையதாகும். பகைக்கு மாட்சிமை தருவதும் அதுவேதான்.

Transliteration:

Anjum aRiyAn amaivilan IgalAn
Thanjam eLiyan pagaikku

Anjum – fearful of everything
aRiyAn – foolish, uneducated
amaivilan – does not accept others or have modesty
IgalAn – does not do any charity
Thanjam – is extremely weak
eLiyan – and is easy to win
pagaikku – for enemies

This verse says which enemy is easy to win and also must be won. One who is fearful of everything, uneducated fool, not modest to accept anyone in his fold, a miser that does not know even the first letter of charity, is a bundle of virtueless character and hence easy to win for enemies. Each one of the above lack of virtue itself is a reason to for enemies to win someone.

If a person is an embodiment of all these above faults, then for enemies he becomes an object as easy as cotton to blow away. Also, being such useless and devoid of virtues, it is justifiable and an act of nobility to win over such enemies, thus justifying why this verse fits this chapter also.

“Fearful of everyone, foolish, miserly, lacking in modesty to accept
Others, is weak and easy to win for enemies as a removable target”


இன்றெனது குறள்(கள்):

அஞ்சுவான் பேதை இணக்கமிலான் ஈயாதான்
பஞ்சின் இலகாம் பகைக்கு

anjuvAn pEdhai iNakkilAn IyAdAn
panjin ilagAm pagaikku

அஞ்சுவான் பேதை இணக்கமிலான் ஈயாதான்
பஞ்சையைப் போன்றாம் பகைக்கு

anjuvAn pEdhai iNakkilAn IyAdAn
panjaiyaip pOnRAm pagaikku

(பஞ்சை - வரியன், உதவாக்கரை - அதனால் வெல்ல எளிதானவன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...