4th Sep 2014
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
(குறள் 862: பகைமாட்சி அதிகாரம்)
அன்பிலன் - தான் பிறர்மேல் அன்பு கொள்ளாதவன்
ஆன்ற துணையிலன் - தமக்கு
உற்ற வலிவான துணையென்று சொல்ல ஒருவருமில்லாதவன்
தான் துவ்வான் - தானாகவும்
வலிமையில்லாதவன்
என்பரியும் - எவ்வாறு
களைவான், நீக்குவான்
ஏதிலான் - தம்முடைய
பகைவர்தம்
துப்பு - வலிமையை
பிறரோடு அன்பில் வாழாதவர்கள்,
தமக்கு உற்ற துணையென்று கூற ஒருவருமில்லாதவர்கள், தாமாகவும் வலிமையில்லாதவர்கள், எவ்வாறு
தம்முடைய பகையின் வலிமையை, நீக்கமுடியும், தொலைக்கமுடியும்?
வலிமையை நீக்குவது என்பது,
அதற்கெதிராக நின்று வெல்லுவது. பிறர்மேல் அன்பு கொள்ளும் தன்மை கொண்டவர்கள், அவர்கள்
ஆதரவை வெல்லுவார்கள். அதேபோன்று உற்ற துணையாக
ஒருவர் இருக்கையிலே அவர்களும் பகைக்கெதிராக ஆதரிப்பர்.
தாமே வலிமையோடு இருப்பின், அதுவும் பகையைத் தொலைக்க உதவும். இவ்வாறு தேவையானவை எதுவுமே
இல்லாமல் எதிர்வரும் பகையைத் தொலைப்பது எவ்வாறு? என்ற கேள்வியை முன் வைக்கிறார் வள்ளுவர்?
Transliteration:
Anbilan AnRa thuNaiyilan thAnthuvvAn
Enbariyum EdilAn thuppu
Anbilan – Compassionless
AnRa thuNaiyilan – Does not have strong companionship
thAn thuvvAn – On his own does not have the strength
Enbariyum – how will he be rid of?
EdilAn – his opponents or enemies
Thuppu – strength?
How can a person
without love and hence compassion for others, or without a true companion or
without strength of his own, conquer a foe’s strength? – asks vaLLuvar through
this verse.
To get rid of
opponent’s strength is to stand against it and win over. How can a person
without compassionate love for others, ask for or expect their support? At
least if there are strong supporters they would stand with, to help face an
opponent; or if a person on his own very strong, that would help also. When
none of these is there, how can a person stand against his enemies?
Without compassionate love for others, or
supporters or strength
On own, how can a person stand against
opponent’s strength?
இன்றெனது குறள்:
அன்பற்றான், தன்வலிவும் நட்பின் வலிவுமற்றான்
என்நீக்கும் ஒன்னார் பகை?
anbaRRAn thanvaliyum naTpin valivumaRRAn
ennIkkum onnAr pagai?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam