87: (Power of Hostility - பகைமாட்சி)
[After
devoting a full chapter on how bad and avoidable the hatred, hostility and the
enmity out of such, in this chapter, vaLLuvar the situations in which
hostility is unavoidable and justifiable too. For people in power, not having
hostile states is impossble and in such cases, it is justifiable to stand up
against them. The ethics meant for individual human beings cannot be applied to
the governance of a state, where over all safety is imperative. The chapter in
general advises as to who can and shall be an enemy. Though the chapter title
seems to glorify the enmity, it speaks against it mostly]
3rd Sep 2014
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
(குறள் 861: பகைமாட்சி அதிகாரம்)
வலியார்க்கு - தம்மிலும்
வலி பொருந்தியவரிடம்
மாறு - பகைகொள்ளும் எண்ணத்துக்கு
ஏற்றல் - பகையாதலைப்
ஓம்புக - போற்றுக
ஓம்பா - போற்றாதீர்
மெலியார்மேல் - தம்மிலும்
எளியாரிடம்
மேக - மேகம்போல்
பரவுதல்
பகை - பகையில்
பரிமேலழகர் உரையில் ஓம்புக, ஓம்பா என்பவற்றுக்குப்
பொருள் கூறுகையில் ஒழிக, ஒழியாது என்று பொருள் செய்துள்ளார். ஆனால் அகராதியிலோ, நாம்
அறிந்தவாரோ அவை எதிர்மாறான பொருளையே தருவன. உரையின் கருத்து முதற்பகுதிக்கு சரியாகவும்,
அடுத்த பாதிக்கு, குறள் வழி நின்றும், பொதுவாக ஒப்புக்கொள்ளும் வகையிலும், பொருந்தாத
கருத்தாகவும் உள்ளது.
வள்ளுவர் கூறுவது இவ்வாறாகத்தான் இருக்கமுடியும்.
தம்மிலும் வலிமை பொருந்தியவரிடம் பகை கொள்ளும் எண்ணத்துக்கு பகையைப் போற்றுக என்று
கவித்துவமாகச் சொல்லுவது, வலியாரோடு பகைக்காதே என்னும் எளிய கருத்தைத்தான். அதேபோல,
தம்மிலும் எளியாரிடம் மேகம்போல் பரவுகின்ற பகையைக் கொள்ளாதீர் என்பது பொருந்தும் கருத்துதான்.
வலியாரோடு பகைக்கூடாது என்பது எச்சரிக்கையின்
காரணமாகவும், மெலியாரோடு பகைபோற்றக்கூடாது
என்பது கருணையின் காரணமாகக்கூறி, தமக்குச் சமரோடு பகை கொள்வதும், சமர் செய்வதும் பற்றி
வள்ளுவர் கூறவில்லையாதலால், அதைத் தவறாகச் சொல்லவில்லை வள்ளுவர்.
Transliteration:
valiyArkku
mARERRal Ombuga OmbA
meliyArmEl
mEga pagai.
valiyArkku – With persons more mightier than him
mARu – to the thougt of being in enmity
ERRal – be an enemy
Ombuga – nurture that thought
OmbA – Don’t nurture the thought
meliyArmEl – with weaker
people
mEga - to spread like a cloud
pagai – in enmity
In parimElazhagar’s commentary, the
words “Ombuga”, “OmbA” are interpreted as “Discard” and “not discarding”; but
the lexicons intepret them just the opposite and that’s how we all know them to
mean too. But his commentary for the first part seems to mean it the right way,
later part , however does not.
vaLLuvar must have said it right. One
must be in enmity with the thought of enmity with more powerful people than
themselves. With less powerful, or weaker ones, must not nurture enmity.
Not to be in enmity with more powerful
is out of caution and the same with weaker and less powerful is out of
compassion. Interestingly vaLLuvar has not said anything about enmity with
people of equal power. Perhaps it is justifiable.
“Be in enmity with the thought
of enmity with people stronger
and do not nurture the thought of enmity with
people, weaker”
இன்றெனது குறள்:
போற்றற்க தம்மில் வலியார் பகைதன்னை
ஆற்றீர் மெலியார்க்கும் அஃது
pORRaRka thammil valiyAr pagaithannai
ARRIr meliyArkkum ahdu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam