2nd Sep 2014
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
(குறள் 860: இகல் அதிகாரம்)
இகலான் ஆம் - வெறுபினால் வரும் பகையாலேதான்
இன்னாத எல்லாம் - துன்பமெல்லாம்
ஒருவர்க்கு
நகலான் ஆம் - மகிழ்வும்
இன்பமுமாம் (நகல் - மகிழ்வு) – (இவற்றைத் தருகின்ற நல்ல நட்பு)
நன்னயம் என்னும் - நன் நயமான
நற்செயல்கள் செய்தல் என்னும் (நட்பு நிலையிலேயே நடக்கும்)
செருக்கு - பெருமை, செல்வம் (ஒருவர்க்கு
இருப்பின்)
துன்பமும்,
இன்பமும், முறையே வெறுப்பின் காரணமான பகை பற்றியும் அது இன்மை பற்றியும் வருவன என்று
சொல்லி அதிகாரத்தை நிறைவு செய்கிறார். பகை
கொண்ட உள்ளத்தாலேயே ஒருவருக்கு துன்பமெல்லாம் வந்துறும். நன்னயமான, நல்ல செயல்களைச்
(நட்பின் வழி நின்று) பிறர்க்கு செய்வோர்க்கு, அதுவே பெருமையும் செல்வமுமாம்; அதன்
காரணம் பற்றி வரும் மகிழ்ச்சியும், இன்பமுமாம்.
நகல் என்ற
சொல், நக என்ற வேர்ச்சொல்லினின்று வருவது. அது சிரிப்பையும், அதற்குக் காராணமான மகிழ்வையும்
குறிப்பது. செருக்கு என்பது ஆணவத்தைக் குறிக்கும் சொல் என்றாலும் பெருமைச், அதற்குக்
காரணமாய செல்வம் இவற்றையும் குறிக்கும். இகலான் என்பதைப் இகல் கொள்ளாதவன் என்று பொருள்
கொள்ளாது, இகலாலேதான், அதாவது இகலின் காரணம் பற்றி என்று பொருள்கொள்ள வேண்டும். அதேபோல்,
நகலான் என்பதை சிரியாதவன் என்று கொள்ளாது, நகையாலே, அதாவது மகிழ்வாலே, அதைத் தருகின்ற
நல்ல நட்பினாலே என்று கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.
Transliteration:
igalAnAm innAda ellAm nagalAnAm
nannayam ennum serukku
igalAn Am –
because of enemity fostered by enemity
innAda ellAm – all
miseries set in
nagalAn Am –
happiness filled with sweetness (that which are because good friendships)
nannayam ennum – all
good deeds done because of such great friendship
serukku – and the pride that a
person has.
Misery
and happiness are because of enemity born of hatred, hostility and being devoid
of that respectively – saying so vaLLuvar completes this chapter on hatred. A
heart filled with hatred and enemity begets misery. Doing good to others, out
of friendship begets pride and hence the happiness.
The
word “nagal” comes from root of “naga” meaning smile, and the implied reason of
great friendship. Similarly the word “serukku” means “arrogance”, but it also
means, pride for genuine reasons. The words “igalAn” and “nagalAn” though sound
to mean negative of being hatred and not smiling, in this case only stress the
reasons of hatred and smile, the Tamil usage goes.
“Hatred and enemity beget misery for anyone
as a sunken ship.
The
wealth of happiness and a smile are from a good friendship.
இன்றெனது குறள்:
துன்பே பகையால் ஒருவர்க்கு நன்னட்பே
இன்பமெனும் செல்வம் தரும்
thunbE pagaiyAl oruvarkku nannaTpE
inbamenum selvam tharum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam