17th Aug 2014
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
(குறள் 844: புல்லறிவாண்மை அதிகாரம்)
வெண்மை - அறியாமை
எனப்படுவது யாதெனின்
- என்று அறியப்படுவது யாதெனின்
ஒண்மை உடையம் யாம் - நான்
ஒளி பொருந்திய அறிவுடையவன்
என்னும் செருக்கு - என்று
ஒருவன் கொள்ளுகிற ஆணவமே
ஆணவம் என்பது அறியாமையின் வெளிப்பாடு, அறிவு என்னும் வெளிச்சத்தை மறைத்து,
அறியாமையாகிய இருளைத் தருவது ஆணவமே. யாமே ஒளி பொருந்திய அறிவுடையவன் என்று உண்மையில்
கற்றறிந்த யாரும் தற்பெருமைக் கொள்ளமாட்டார். அறிந்தது அணுவளவிலும் சிறியதென்றும்,
அறியாதவை அண்டத்தினளவென்றும் உணர்ந்த யாருமே அவ்வாறு செருக்கித் திரியார். அவ்வாறு
திரிவாரெனில் அவர அறியாமையில் உழல்பவரே, என்கிறது இக்குறள்.
Transliteration:
veNmai
enappaDuva diyAdhenin oNmai
uDaiyamyAm
ennum serukku
veNmai - ignorance
enappaDuvadu
yAdhenin – what that is
oNmai
uDaiyam yAm – I am bright and wise (as if know all)
ennum
serukku – such bloated thought of arrogance.
Arrogance is, exhibition
of ignorance. It masks the bright light of wisdom, and sets in the darkness of
ignorance. Truly wise and learned will never for a moment, think such thoughts
of arrogance. Only a person who does not understand that one can possibly know in
the whole life time, a tiny speck of knowledge, smaller than an atom and that
which is unknown is as big as universe, can bask in such arrogance. Such arrogant
people dwell in ignorance
“That which is known as stupidity and ignorance
is - bloated
feeling of brilliance out of arrogance”
இன்றெனது குறள்:
அறிவுடையேம் யாமெனும் ஆணவம் கொள்ளல்
அறிவிலாமை என்பதன் சான்று
aRivuDaiyE yAmenum ANvam koLLal
aRivilAmai enbadhan sAnRu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam