18th Aug 2014
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
(குறள் 845: புல்லறிவாண்மை அதிகாரம்)
கல்லாத - தான் கல்லாதவற்றை
மேற்கொண்(டு) ஒழுகல் - தான் கற்றதுபோல் காட்டிக்கொண்டு
நடத்தல் ஒருவரை
கசடற வல்லதூஉம் - அவர்
குற்றமில்லாமல் கற்று தேர்ந்த பொருள்களிலும்
ஐயம் தரும் - இவர்
வல்லவர்தானா என்பதில் ஐயம் வரும்.
குறைகுடம் போன்றவர்களே,
கல்லாத பொருள்களிலும் கற்றதுபோல் வீண்பெருமை பேசுவர், கற்றதுபோல் காட்டிக்கொள்வர்.
அத்தகையோர் புல்லறிவாளர்களே. அவர்கள் வீண்பெருமையைக் காணும்போது, அவர்கள் உண்மையிலே
கற்று தேர்ந்த பொருள்களிலும் இவர் அவற்றில் வல்லவர்தானா அல்லது வீண்பெருமைதான பேசுகிறாரா
என்று ஐயப்பட வைக்கும். அத்தகையோர். குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் துளும்பாது அல்லவா?
Transliteration:
kallAda mERkoN Dozhugal kasaDaRa
valladUum aiyam tharum
kallAda – Even in the subjects one is not well versed
mERkoND(u) ozhugal – that person showing off as if abundantly
knowledgeable
kasaDaRa valladUum – in the few subjects they may truly be well
versed,
aiyam tharum –will raise doubts to others if they are
truly learned in those too.
People that are
like partially filled water pots, will make most noise and be vainglorious even
in the subjects they are far from being well versed; they would show off. When
such people are truly well versed in a few subjects also, people would wonder
if they know the subject or if it is again being boastful. After all the empty
vessels make most noise – as implied this verse.
“An ignorant fool of vainglory in subjects
not knowledgeable
shall
be doubted even in a few he knows, as being boastful
இன்றெனது குறள்:
கல்லாத கற்றதுபோல் காட்டுதல் கற்றதிலும்
அல்லனோவென் றையுரவைக் கும்
kallAdha kaRRadhupOl kATTUdal kaRRadhilum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam