6th Aug 2014
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
(குறள் 833: பேதைமை அதிகாரம்)
நாணாமை - வெட்குவதற்கு வெட்கப்படாமை
(பழிக்கும், பாவத்துக்கும்)
நாடாமை - எவற்றை விரும்பிக் கொள்ளவேண்டுமோ
அவற்றை விரும்பிக் கொள்ளாமை
நார் இன்மை - அன்பு
இல்லாது எல்லோர் உறவையும் முறித்துக்கொள்ளும் இயல்பு
யாதொன்றும் - எவற்றையும்
(காக்கவேண்டுவன)
பேணாமை - நினைந்து ஒழுகாமை
பேதை - மடமையில் உழல்பவர்க்கு
தொழில் - இயல்பாகவே தொழில் சிறந்த
நேர்த்தியில் வருவது (இதில் ஒரு நையாண்டியைக் காண்க)
மடமையில்
உழல்பவர்க்கு இயல்பாகவே தொழில் நேர்த்தியுடன் வருவது, வெட்கப்படுப்பவனவற்றுக்கு வெட்கப்படாமை,
எவற்றை விரும்பிக் கொள்ளவேண்டுமோ அவற்றை விரும்பிக் கொள்ளாமை, அன்பெனும் ஈரம் இல்லாது,
எல்லோருடைய உறவையும் முறித்துக்கொள்ளும் இயல்பு, மற்றும் எவற்றைக் காக்கவேண்டுமோ, அவற்றில்
நின்று ஒழுகாமை போன்றனவாம். மடமையில் உழல்பவர்க்கும்
ஒரு தொழில் நேர்த்தியில் இவை என்று சொன்னதால், சற்று நையாண்டி கலந்த குரலாக ஒலிப்பதை
உணரலாம். நார் என்ற சொல் நாரம் என்பதற்கு மூலச் சொல்லாகையால், ஈரம் என்பதை உணர்த்தி,
ஈரத்தைத் தருவதாகிய அன்பு என்பதை உணர்த்துகிறது.
Transliteration:
nANAmai nADAmai nArinmai yAdhonRum
pENAmai pEdhai thozhil
nANAmai – not feeling shameful
for that one has to be shameful
nADAmai – not desiring what
needs to be desired
nAr inmai – not
having compassion towards anyone and breaks relationships easily
yAdhonRum –
what needs to be (preserved)
pENAmai – not holding dearly
pEdhai – foolish person’s
thozhil – work
Those
who are foolish, have it as their nature and work to be not shameful for things
they need to be shameful; not desiring what needs to be desired; not having
compassion, breaking relationships with everyone; not preserving what needs to be
preserved. Since vaLLUvar used the word “thozhil” there is a sarcasm implied, that
foolish do what shall not be done, as professional practioners so naturally. The
word “nAr” is the root for “nAram”, which means water. So vaLLuvar
implies wetness in heart which in turn means compassionate heart.
“Not ashamed of ill, not desiring that
which is desirable, not being compassionate
not
preserving what needs to preserved are in the nature and work of foolish sort”
இன்றெனது குறள்:
வெள்காமை தேடாமை அன்பிலாமை காப்பதொன்றும்
உள்காமை பேதைக் கியல்பு
(வெள்குதல் - வெட்கப்படுதல்; தேடாமை - தேடிப்
பெறவேண்டியன பெறாமை; உள்குதல் - நினைத்துப் பார்த்தல்)
veLgAmai thEDAmai anbilAmai kAppadhonRum
uLgAmai pEdhaik kiyabu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam