5th Aug 2014
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
(குறள் 832: பேதைமை அதிகாரம்)
பேதைமையுள் எல்லாம் - மடமைக்குள்
எல்லாம்
பேதைமை - இழிந்த மடமை
காதன்மை - ஆசைகள்
கையல்லதன் கட் - தனக்குத் தகாதவற்றின்
மேல்கொண்டு
செயல் - செயலாற்றுதல்
மடமைக்குள்
எல்லாம் இழிந்த மடமை என்பது, தம்முடைய ஒழுக்கத்துக்கு ஆசையால் ஏற்பிலாத செயல்களுக்கு
இடம்தந்து செயல் ஆற்றுதல் என்பதிக்குறள். இக்குறளைப்
பொருத்தவரை தகாத ஆசைகள் என்று அறிந்தும் ஒருவன், அவற்றை ஆற்றுவானாயின், அவர்க்கறிவிருந்தும்
அவர் மடமை கொண்டவரே.
Transliteration:
pEdaimaiyuL ellAm pEdhaimai kAdhanmai
kaiyalla thankaT seyal
pEdaimaiyuL ellAm – Worse than all foolishness
pEdhaimai – is the idiocy
kAdhanmai – of taking delight
in
kaiyallathankaT – what
is not appropriate to do
seyal – doing (what is not appropriate)
Worse than all
idocy is to take delight in doing what is not appropriate, says this verse.
Even if somebody is edrudite otherwise, if he can’t avoid indulging in
things that are not appropriate, he is definitely worse than all fools.
“Worse than all idiocy is to take delight
in
deeds inappropriate, suffer the plight”
இன்றெனது குறள்:
மடமையில் மிக்கது ஏற்பிலாத ஆசைக்
கிடந்தந்து ஆற்றிச்செ யல்
maDamaiyil mikkadhu ERpilAdha Asaik
kiDanthandhu ARRichche yal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam