ஆகஸ்ட் 07, 2014

குறளின் குரல் - 840

7th Aug 2014

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
                        (குறள் 834: பேதைமை அதிகாரம்)

ஓதி - கற்கவேண்டியவற்றை கற்று
உணர்ந்தும் - அவற்றின் பொருள்களை உணர்ந்தும்
பிறர்க்குரைத்தும் - அவற்றைப் பிறர்க்கு உரைப்பவராயிருந்தும்
தான் அடங்காப் - தாம் அவற்றின்படி அடங்கி ஒழுகாத
பேதையின் - மடையனைவிட (அறிவீனன்)
பேதையார் இல் - இழிந்த மடையன் வேறு எவரும் இல்லை.

“கற்கக் கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக” என்று முன்பே தெளிவாக சொல்லியிருக்கிறார் வள்ளுவர். கற்கத்தக்கவற்றைக் கண்டு, அவற்றைக் குற்றமில்லாமல் கற்று, பின்பு கற்றவற்றின் கருத்துக்கேற்ப நல்வழிகளில் நின்று ஒழுகுதல் வேண்டும். அவ்வாறு கற்ற கல்வியின் பயனையும், பொருளையும் ஒருவர் உணர்ந்திருந்தும்,  அவற்றைப் பிறருக்கு உரைக்கும் பெரு நிலையில் அவர் வைக்கப்பட்டிருந்தும், ஒருவர் தாம் பிறருக்கு வழிநடத்தும் வழிகள் படி ஒழுகவில்லையாயின் அதைவிட அறிவீனம் வேறு என்ன இருக்க முடியும்? அவ்வாறிருப்பவனை, விட இழிந்த மடையன் (அறிவீனன்), அறிவை வீணடித்தவன் யாரும் இல்லை.

சிறுபஞ்சமூலப் பாடல் வரி, “பேதைக்குரைத்தாலும் செல்லா துணர்வு” என்கிறது. இது ஒப்புக்கொள்ளக்கூடியதே இருப்பினும், ஓதி உணர்ந்தவனே பேதை இயல்பினனாக இருப்பின், என்ன பயன்?

கம்பனின் கவிநயம், இவ்வாறு சொல்லுகிறது இக்குறளின் கருத்தையே:

“நற்பெருங் கல்விச்செல்வம் நவையறு நெறியை நண்ணி
முற்பயன் உணர்ந்த தூயோர் மொழியொடும் பழகி முற்றிப்
பிற்பயன் உணர்தல் தேற்றாப் பேதை” (களியாட்டுப் படலம்)

Transliteration:

Odhi uNarndhum piRaikkuraiththum thAnaDangAp
pEdhaiyin pedhaiyAr il

Odhi – Learning whatever needs to be learned
uNarndhum – even understanding the purpose and good of what was learned
piRaikkuraiththum – and further even being in the status of lecturing others about what he has learned
thAnaDangAp – not following his own learning
pEdhaiyin – worse fool
pedhaiyAr – than this fool
il - none

vaLLuvar has already said in the chapter of “learning”, “ to learn choosing what is right to learn, learn without flaw, and more importantly, live by his learning steadfast. This verse says, a person of such learning, with deep understanding, and is also in the status of guiding others, if he does not follow his own preaching, what good is it? Is there a worse fool than such a person, asks this verse.

There is no worse fool than a fool that is learned, understands his learnings
And can also preach good to others, when he doesn’t live by his learnings”


இன்றெனது குறள்:

கற்றுணர்ந்து மற்றோர்க் குரைத்த வழிநடவார்
முற்றிலும் பேதையராம் காண்

kaRRuNarndhu maRROrk kuraiththa vazhinaDavAr
muRRiulm pEdhaiyarAm kAN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...