2nd Aug 2014
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
(குறள் 829: கூடாநட்பு அதிகாரம் )
மிகச்செய்து - மிகவும்
நட்புறவில் இருப்பவரைப்போல் புறத்தில் இனிமை, அகத்தில் பகைமை கொண்டு
தம் எள்ளுவாரை - தம்மை
இகழ்வாரையும்
நகச்செய்து - அவரைபோலவே
(புறத்தில் மகிழ்ச்சியாக இருக்கச் செய்து)
நட்பினுள் - நட்புறவிலேயே
இருத்தி
சாப் - அவர்
மனத்திலே வருந்தி இறக்கும் துன்பமே பெறுகிறார்போல
புல்லற்பாற்று - அவரோடு
ஒட்டி ஒழுகுக (புல்லுதல் - நட்புறவாய் ஒட்டிக்கொள்ளுதல்)
கூடா
நட்பினரை ஒறுக்கும் விதம், அவரைப் போலவே நட்புறவில் ஒழுகி, வெளியிலே சிரித்து, அகத்திலே
அழிக்கும் எண்ணம் கொள்ளுதலே என்கிறார் வள்ளுவர். அமைதி காத்து, சொல்லால் திருத்த முயற்சி
செய்து, பின்பு ஏதேனும் பொருள் கொடுத்தாவது, அல்லது, அவருக்கு அவர்வழியே நின்று தண்டனைக்
கொடுப்பது என்று, எல்லா வழிமுறைகளையுமே வள்ளுவர் காட்டுவதன் ஒரு சோற்றுப்பதமே இக்குறள்.
அதாவது
வஞ்சகரை வஞ்சகம் செய்து வஞ்சிப்பதே தண்டிப்பது என்பது இக்குறளின் அடிநிலைக் கருத்து.
ஆனால் வள்ளுவரே “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்” என்றும் கூறியிருப்பதையும்,
ஒளவை சொன்ன, “வஞ்சனைகள் செய்வாரோடு இணங்கவேண்டாம்” என்பதையும் ஒப்பு நோக்கும்போது,
கீதையில் கண்ணன் சொன்னது போல தருமத்தின் பாதை மிகவும் சிக்கலானது. வெவ்வேறு நேரங்களில்
அது இடம், பொருள் இவற்றுக்கேற்ப மாறும் போலும். சாணக்ய நீதி சொல்லுவதுபோல், இக்குறள், “பகையை உறவாடிக் கெடு”
என்கிறது. இதை இருவிதமாகக் கொள்ளலாம். அன்பின் வழி நின்று பகையை மாற்று என்றும், அல்லது
அழி என்றும்.
Transliteration:
Migachcheidu thameLLu vArai nagachcheidu
naTpinuL sAppullaR pARRu
Migachcheidu – As if in good friendship outwardly, but
inside full of hatred
Tham eLLuvArai – those that speak act with illwill
Nagachcheidu – make them happy outwards (as they to unto
you)
naTpinuL – keep them in friendship (making them believe
you’re naïve)
sAp – for them to suffer inside too, like you did as if it is sadness of
death
pullaRpARRu – be in such façade friendship to thouse devious
friends
To properly punish
the façade friends that show outwardly friendship, but harbor hatred inside is
to be like them, pay by the same coin – smile outside, but nurture harmful
thoughts inside. Sometimes when all avenues of keeping patience, negotiations,
or even offering in kind are exhausted, the punishing route is to be
considered. VaLLuvar shows a sample of such path through this verse.
To win cunning by
cunnings is the baseline thought of this verse. But it is important to remember
the same poet has said earlier, “to best punish some that does harm is to do
extreme good to them”. Also AuvyyAr has
said, “never be in friendship with cunning”. Comparing all these, it is
apparent that the path of virtue and dharma is very tricky and complicated. No
one solution is always applicable. It goes along with the chANakya nIdhi, “befriend
the foe to destroy”.
“Show the façade friendship of outward warmth,
hatred inside
that
you’re equally adept at the same to play it to your upside”
இன்றெனது குறள்:
புறத்தில் நகைசொல் அகத்தில் பகைகொள்
திறத்தோர்க்கும் செய்கவதை யே
puRaththil nagaisol agaththil pagaikoL
thiRaththOrkkum seigavadai yE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam