1st Aug 2014
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
(குறள் 828: கூடாநட்பு அதிகாரம்)
தொழுத கையுள்ளும் - வணங்கிய
கைகளுக்குள்
படையொடுங்கும் - கொல்லுகின்ற
ஆயுதம் ஒளிந்திருக்கும்
ஒன்னார் - பகைவருக்கு
அழுத கண்ணீரும் - அவர்
அழுது கண்ணீர் விடுவதும்
அனைத்து - அதேபோன்று
போலியானது, இடர் விளைவிப்பது
பகைவர்கள் தொழுவணங்கும்போது
அவருடைய கைகளுக்குள் கொல்லுங்கருவி ஒளிந்து இருக்கக்கூடும், பூவுக்குள்ளும் பூநாகம்
இருப்பதுபோல. அதேபோல அவர்கள் அழுது கண்ணீர் சிந்துவதும் அடுத்தவரைக் கெடுப்பதற்கேயாம்.
புறநானூற்று வரியொன்று “வழிபடுவோரை வல்லறிதியே”, அதாவது, “வழிபட்டு நிற்போரின்
உண்மை நிறத்தை விரைந்து அறிவாய்” என்று சோழன்
நெய்தலங்கானல்
இளஞ்சேட் சென்னிக்கு ஊன்பொதி பசுங்குடையார் என்னும் சங்கப்புலவர் பாடியது.
சீவக சிந்தாமணிப் பாடல் இக்குறளின் கருத்தையே, இவ்வாறு கூறுகிறது.
“தொழுத தம் கையின் உள்ளும் துறு முடி அகத்தும்
சோர
அழுத
கண்ணீரின் உள்ளும் அணிகலத்து அகத்தும் மாய்ந்து
பழுது
கண் அரிந்து கொல்லும் படையுடன் ஒடுங்கும் பற்றாது
ஒழிக யார் கண்ணும் தேற்றம் தெளிகுற்றார் விளிகுற்றாரே”
பகைவுறவோர் தொழுத தம் கையிலும், மயிர் நெருங்கிய முடியிலும், ஒழுக
அழுத கண்ணீரிலும், அணிகலன்களிலும், கொல்கின்ற படை சேர ஒடுங்கும்; அதனை ஆராய்ந்து, அக்
கூடா நட்பைத் தம்மிடமிருந்து நீக்கி, யாவரிடத்தும் தெளிதலைப் பற்றாது விடுக, அன்றித்
தெளிதல் கொண்டவர் இறந்தோரே யாவர், என்பதே இப்பாடல் சொல்லுவது.
Transliteration:
Thozhudakai
yuLLum paDaiyoDungum onnAr
azhudhakaN
NIrum anaiththu
Thozhuda
kaiyuLLum – Even in the hands folded in respect
paDaiyoDungum –
weapon to kill could be hiding
onnAr – for
the enemies
azhudha
kaNNIrum – Even their tears
anaiththu – are
false and of the same nature.
The enemies bowing with folded
hands in false respect may have a killing weapon, like a snake hidden in a
flower, wreaking harm. Even their tears have the same effect, to wreak harm. In
PuranAnURRu poem, the poet uNpodhi pasunkuDaiyAr, also cautions the chOlA king
ilanjchEt chenni that he should know the person that bows with folded hands.
In another poem in Cheevaga
ChinthAmaNi, the poet cautions the same way to stay away from those enemies
with folded hands, or shed crocodile tears.
“Hidden in the bowing hands of an enemy, may be a weapon to
kill
So are their eyes
shedding crocodilee tear with intentions of devil”
இன்றெனது குறள்:
வணங்கும் பகைக்கையுள் வாள்போன்றாம் அன்னார்
நுணங்கிச் சொரிகண்ணீ ரும்
vaNangum pagaikaiyuL vALpOnRAm annAr
nuNangich chorikaNNI rum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam