ஆகஸ்ட் 03, 2014

குறளின் குரல் - 836

3rd Aug 2014

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
                        (குறள் 830: கூடாநட்பு அதிகாரம்)

பகை - பகைவர்
நட்பாம் - நட்பு நிலையில் இருக்கும்
காலம் வருங்கால் - நேரம் வருமாயின் (காலத்தின் கோலத்தால், ஊழ்வலியால்)
முக நட்டு - முகத்தளவில் மட்டும் நட்பைக் காட்டி
அக நட்பு - உள்ளத்தால் நட்பைக் (காட்டாது)
ஒரீஇ விடல் - செல்ல விடுக

நட்பு அதிகாரத்தில் “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு" என்று நட்பை இனம் காட்டும் வழியைச் சொல்லிவிட்டு இந்த குறளில், அகத்தளவில் கொள்ளாது முகத்தளவில் நட்பை பகைவரிடம் காட்டவேண்டும் என்கிறார் வள்ளுவர். பகைவரோடு நாம் நட்பு நிலையில் இருக்கவேண்டிய காலம், தேவையின் காரணமாகவோ, அல்லது ஊழ்வினைக் காரணமாகவோ வருமாயின், அந்நட்பை முகத்தளவு நகை காட்டி, அகத்தளவில் அந்நட்பை கொள்ளற்க என்கிறார் வள்ளுவர். 

கம்பரின் இராமாவதாரத்தில், கிட்கிந்தா காண்டத்தில், அரசியல் படலத்தில் வரும் பாடலொன்றில் இவ்வாறு கூறுகிறார். படிப்பதற்கு எளிதாகப் சொற்களைப் பிரித்தே கொடுக்கப்படுகிறது.

 “புகை உடைத்து என்னின், உண்டு பொங்கு அனல் அங்கு என்று உன்னும்
  மிகை உடைத்து உலகம்; நூலோர் வினயமும் வேண்டற் பாற்றே;
  பகையுடை சிந்தை யார்க்கும் பயன் உறு பண்பின் தீரா
   நகையுடை முகத்தை ஆகி இன் உரை நல்கு, நாவால்”

 அதாவது, இவ்வுலகம், ஓரிடத்தில் புகை இருக்குமானால், அங்கு கொழுந்துவிட்டு எரிகின்ற நெருப்பு உண்டு என்று ஊகித்து அறிகின்ற கருதறிவினைக் (inference) கொண்டது. ஆனால், அதனோடு நூல் வல்லோர் கூறிய சூழ்ச்சியறிவும் அரசாள்பவருக்கு வேண்டும். பகைமை உடையாரிடத்தும்,  அவரவர்க்கு ஏற்றார்போல்,  பயன் தருவதாக, அவர்தம் இயல்பறிந்து, தம் பண்பும் மாறாது, மலர்ந்த இன் சிரிப்புடைய முகமு, இன் சொற்களையும் சொல்வாயாக. இதனால் நல்லவர்க்கு நல்லவராய், பகைவர்க்கு, அவரை அடக்குவதற்கு நல்லவர்போன்று இருக்கவேண்டியது உணர்த்தப்படுகிறது. காலம் அறிதல் அதிகாரத்தில், ஏற்கனவே இக்குறளை ஒட்டிய கருத்தை இவ்வாறு கூறியுள்ளார். பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல் “பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து உள் வேர்ப்பர்
ஒள்ளியவர்.  (காலம் அறிதல் - 487)”;

அவ்வாறு முகத்தளவு மட்டும் நட்பைக் காட்டும்போது, முகநக நட்பா, அகநக நட்பா என்று ஆராய்பவர்களுக்கு அது தெரிந்துவிடுமே!. ஆனாலும் இக்குறளின் கருத்து கைக்கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. தமிழ் அகராதியில் பகைவர் என்பதைக் குறிக்க நூற்றுக்கு மேற்பட்ட சொற்கள் உள்ளன. இகழுநர் என்பது ஒன்று.

Transliteration:

pagainaTpAm kAlam varungAl muganaTTu
aganaTpu orIi viDal

pagai - enemies
naTpAm – to be in friendly state
kAlam varungAl – if such time arrives
muga naTTu – show a friendly face
aga naTpu – but not nurture the friendship in heart
orIi viDal – let it slip

In the chapter of “friendship” vaLLuvar said, the friendship that smiles at face is not, but that one which makes us smile inside is a true friendship, to help us identify a true friendship. Here, he advocates having smiling face to a foe that becomes a friend by the design of fate, but not to nurture that inside the heart.

But is n’t true that people that look for signs of such fake friendship, it would be easy to recognize that? Regardless, the verse is a practical one

In Kamba rAmAyaNam, from the very God-incarnate Rama comes these words, that it is inferred that when there is smoke, there is fire. So, apart from the knowledge from book, one shall have the ability to apply even cunning when it comes to enemies; be in friendly terms with them to get rid of them at the appropriate time. Once again, we have seen the same thought of this verse in the chapter of “knowing appropriate time”, in a verse where vaLLuvar has said, that the wise would not immediately and hastily exhibit anger; they would watch and wait their time, with restrain inside.

“If a time comes when an enemy becomes a comrade
 don’t nurture that in heart, slip it with a smilng façade”


இன்றெனது குறள்:

அகத்திலாது தம்முகத்து மட்டும்கொள் நட்பை
இகழுநர் நண்பரா யின்

agaththilAdhu thammukaththu maTTumkoL naTpai
ikazunar naNbarAyin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...