27th Jul 2014
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
(குறள் 823: கூடாநட்பு அதிகாரம்)
பல நல்ல - நல்லவற்றைப் பல நூல்களிலிருந்து
கற்றக் கடைத்து - கற்று
தேர்ந்தும்
மனநல்லர் ஆகுதல் - மனம்
செம்மைபடுதல் என்பதும், அதனால் நட்புறவில் நிலைபெறுதலும்
மாணார்க்கு - சால்பிலார்க்கு
(நண்புறவில் உள்ளார்ந்து கூடாதவர்க்கு), பகைவருக்கு
அரிது - கடினம்.
நண்புறவில் உள்ளார்ந்து
கூடும் மேன்மை இல்லாதவர்க்கு, பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்திருந்தும், அவற்றால்
மனம் செம்மைப் பட்டு, நட்புறவில் நிலைத்து இருத்தல் என்பது மிகவும் கடினம். இதுவே இக்குறள்
சொல்லும் கருத்து. வெறும் ஏட்டறிவினால் மட்டும் நற்குணங்கள் எல்லோருக்கும் வருவதும்,
அவற்றால் உள்ளார்ந்த நட்பை எவரோடும் கொள்வது அரிது,
Transliteration:
Palanalla kaRRak kaDaiththu manallar
Agudal mANArk karidu
Pala nalla – from good scriptures
kaRRak kaDaiththu - Even if much learned (from those
scriptures)
manallar Agudal – for the mind to be refined
mANArkku – those who lack excellence innately (to be true to
friendship)
aridu – is difficult
Those who don’t
have the innate excellence to be true to a good friendship, however much
learned they are in good scriptures, it is difficult to have refined mind to be
in an intimate friendship or be a truthworthy friend, says this verse. Mere
knowledge alone does not suffice for somebody who lacks that refined mind.
“Though well versed in many good
scriptuteres, for unrefined
It is
difficult to be a trustworthy friend to anyone in their mind”
இன்றெனது குறள்:
நூல்பல கற்றிருந்தும் நன்மனத் தோடுகேண்மை
சால்பிலார்க்கு என்றும் அரிது
nUlpala kaRRirundum nanmanath thODukENmai
sAlbilArkku enRum aridu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam