26th Jul 2014
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
(குறள் 822: கூடாநட்பு அதிகாரம்)
இனம்போன்று - நமக்கு
உற்றவர்போல் தோற்றமளித்து
இனமல்லார் - உண்மையில்
அவ்வாறில்லார்தம்
கேண்மை - நட்புறவு
மகளிர் மனம்போல - பெண்களின்
உள்ளம்போல்
வேறுபடும் - நிலையில்லாது
மாறுபடும் தன்மையது.
இக்குறள் சொல்லும் கருத்து:
நமக்கு உற்றார்போல் தோன்றி, உண்மையில் அவ்வாறு அற்றார்தம் நட்புறவானது, பெண்களின் உள்ளம்போல
நிலையில்லாது மாறுபடும் தன்மையதாம். அதனால் அது நம்பத்தகுந்த நட்புறவு அல்ல என்பது
உணர்த்தப்படும் கருத்து.
வள்ளுவர் பொதுவாக “மகளிர்” என்றதை, பின்னாள்
உரையாசிரியர்கள், “பொது மகளிரென்று”, “அதாவது “விலை மாதரென்று” பெண்ணினத்தை பொதுவாக
புண்படுத்தாத வகையிலே உரை செய்துள்ளனர். பொதுமகளிர் மட்டுமல்லாது, குலமகளிரும் உள்ளம்
திரிதலை, குணம் கெடுதலை அடைவர் என்று காளிங்கர் உரை குறள் வழியே நின்று பொருள் கூறுகிறது.
வளையாபதிப்பாடல் இவ்வாறு
கூறுகிறது “பெண்ணினது மனத்தியல்பினை
மாற்றி ஒருமுகப்படுத்துவேன் என்று ஆராய்ச்சியில்லாத
மடவோனுடைய தன்மையை நினையுங்கால், அம்முயற்சி எதனை
ஒக்குமெனின், தெளிந்த
நீரிலேபெய்யப்பட்டு
நான்கு திசைகளினும் பரவிச் சென்று அழிந்து போன, எண்ணெயை மீண்டும் ஒருசேரக்
கொண்டுவந்து
சேர்த்தற்கு அவாவுதலையே ஒக்கும் என்பதாம்”. அதாவது பெண்ணின் மனது பொதுவாக மாறும் தன்மையுடைத்து,
ஒருமுகப்படுத்தலுக்கு ஏலாதவொன்று என்பதே இப்பாடலின் மையக்கருத்து, குறளின் ஒப்புமைக்
கருத்து. இனி அப்பாடல்,
தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட
எண்ணெய்கொண்
டீட்டற் கிவறுதலென்னொக்கம்
பெண்மனம்
பேதிக் தொருப்படுப்பெ னென்னு
மெண்ணி லொருவ னியல்பெண்ணு மாறே.
நீதிநெறி விளக்கப்பாடலொன்றும்
இதே பொதுவாக பெண்களின் மனம் திரியும் இயல்பைக் கூறுகிறது.
“ஏந்தெழின்
மிக்கா னிளையா விசைவல்லான்
காந்தையர்
கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த
நயனுடை
யின்சொல்லான் கேளெனினு மாதர்க்
கயலார்மே
லாகு மனம்”
பெருங்கதை வரிகளும், “மாரியுந்
திருவு மகளிர் மனமுந்
தக்குழி நில்லாது பட்டுழிப் படும்”, என்று மகளிர் மனம் மாறுபடும்
இயல்பைக் கூறுகிறது. எனினும், இன்றைய மாற்றுக்குறளில்
பொதுவாக மகளிர் என்னாது பெண்டிருக்கும் ஏற்புடைய வகையில் “உளந்திரிபுற்ற பெண்டிர் போல்”
என்று சொல்லப்படுவதை கவனிக்க.
Transliteration:
inampOnRu inamallAr kENmai magaLir
manampOla vERu paDum
inampOnRu – As if they are so close to us
inamallAr – but in reality, not being so
kENmai – their friendship
magaLir manampOla – like the heart of females
vERupaDum – does change often, not being stable .
The verse says, the friendship of those who appear very close to,
but in reality not so, is like the heart/mind of females, is not stable, and susceptible
to changes often. The interpretation of the word “magalir” by later day
commentators, points to females that sell their bodiesas as if they are the
only ones that change their mind at will.
It looks as if this safe interpretation is for being politically
correct with the current times; however, old school thought and poems in
literature have specifically attributed that trait to females in general. In
reality it is true that the unreliable and changing minds are applicable to
both genders in general.
Verses in vaLaiyApathi,
nIdineRi viLakkam and perungkadai as pointed in the Tamil
commentary section, also support the line of thought of vaLLuvar and have expressed very openly about the
opportunistic tendency of females in general.
My alternate verse for the day, leaves it ambiguously to support
the reality and is subject to interpretation both ways., depending on where the
emphasis is!
“Friendship of a person appearing to be close, yet in reality
otherwise
is like the changing
minds of females, difficult to fathom, innately vice”
இன்றெனது குறள்:
உற்றார்போல் தோன்றியற்றார்
நட்பு உளந்திரி
புற்றபெண்டிர் போல்மாறு
மே
uRRArpOl
thOnRiyaRRAr naTpu uLanthiri
buRRapeNDir
pOlmARu mE
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam