21st Jul 2014
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
(குறள் 817: தீநட்பு அதிகாரம்)
நகை வகையராகிய - மற்றவர்கள்
எள்ளும்படியான செயல்களுடையவரோடு
நட்பின் - கொள்ளும் நட்பை விட
பகைவரால் - நம்முடைய பகைவர்களால்
வரும் துன்பம்
பத்தடுத்த கோடி - பத்துக்கோடி,
அல்லது பன்மடங்கு துன்பமும்
உறும் - உற்று
கொள்ளத்தக்கதாம்
தீய
நட்பு கூடாமையை ஒரு மிகைபடுத்தல் மூலமாக வலியுறுத்துகிற குறள்! நம்மை நகைப்புக்குரிய
பொருளாக்கும் நண்பர்கள் என்பவர்களை விட நம்முடைய பகைவர்கள் செய்யும் பன்மடங்கு (இக்குறளில்
பலகோடி என்று சொல்லுவதால்) துன்பங்களே மேலாம் என்று சொல்லி தீய நட்பு கூடாமையை வலியறுத்துகிறார்.
Transliterartion:
nagaivagaiya rAgiya naTpin
pagaivarAl
paththaduththa kOTi uRum
nagai vagaiyarAgiya –
those who indulge in deeds for others to redicule and laugh,
naTpin –
instead of those person’s friends
pagaivarAl –
that which is done by foes
paththaduththa kOTi –
even if they are multitudes in number (ten crores)
uRum – better.
A
verse that insists not having evil friendship, by excessive emphasis; better
that friends that subject us to redicule and other’s laughter, foes that do many
ills are many times better; by saying ten crore ills, though seems excessive
stressing, the intent is well stressed.
“More than having friends that subject us to
laughter of redicule
It is
better to have millions foes throwing rain of ill and ill will”
இன்றெனது குறள்:
பகைமுட்டிப் பற்றுகின்ற பன்மடங்குத் துன்பும்
நகைபடும் நட்பின் இனிது
pagaimuTTip paRRuginRa panmaDanguth thunbE
nagaipaDum naTpin inidu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam