20th Jul 2014
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
(குறள் 816: தீநட்பு அதிகாரம்)
பேதை - அறிவிலியோடு
பெருங் கெழீஇ - பெரிதாக
ஆழ்ந்து கொள்ளும்
நட்பின் - நட்பை விட
அறிவுடையார் - அறிவுள்ளோரோடு கொள்ளும்
ஏதின்மை - பகைமை
கோடி உறும் - பன்மடங்கு
மேலாம் (கோடி மடங்கு)
குறள் சொல்லும் கருத்து எளிதான ஒன்றே. அறிவிலாரோடு
கூடிய ஆழமான பெரிய நட்பிலும், அறிவுள்ளவரோடு கொள்ளும் பகைமை கோடிமடங்கு நன்றாம், அறிவுள்ளாரோடு
பகைமை கொண்டாலும் அதனால் வரும் அழிவு ஒன்றும் இல்லை. அறிவுள்ளவர்களாயின் இருப்பின்
அவர்கள் பகைமை பாராட்டுவதில்லை. ஆனால் அறிவில்லாரோடு கொண்ட நட்பினால் ஆகும் பயனொன்றுமில்லை;
மேலும் அவற்றால் தீங்கு வரவே வாய்ப்புகள் அதிகம்.
கீழ் காட்டப்பட்டுள்ள நாலடியார் பாடல், இப்பாடலின்
கருத்தையொட்டி இவ்வாறு கூறுகிறது - தமக்குப் பொருந்திய சிறுமைச் செயல்களையுடைய
பண்பிலாதாரிடத்தில் நேயங்கொண்ட அளவும் துன்பமேயாம்; மாறிய செயல்களை விளையாட்டாகவும்
விரும்பாத சிறந்தஅறிஞர்களிடத்தில், பகைகொள்ளுதலுங்கூட மாட்சிமைப்படும்
இசைந்த
சிறுமை இயல்பிலாதார்கண்
பசைந்த
துணையும் பரிவாம் - அசைந்த
நகையேயும்
வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும்
பாடு பெறும்
பெருங்கதையில் வரும் இவ்வரிகளும் அதையே கூறுவதைக்
காணுக: “ இழிந்த மாக்களொடின்பம் ஆர்த்தலின்
உயர்ந்த மாக்களொடுறு பகை இனிது”
Transliteration:
pEdai perungkezhIi naTpin aRivuDaiyAr
Edinmai kODi yurum
pEdai – a fool’s
perung kezhIi – deep and big
naTpin – more than that friendship
aRivuDaiyAr – The learned’s
Edinmai – enemity
kODi yurum – ten million times better.
What
this verse says is a simple thought to comprehend. It is many times better (the
verse says ten million times) to have enemity with learned than to have deep friendship
with fools. Enemity with learned does not
yield anything bad as they have better things to do and a persons’ enemity will
not affect them to adversely retort because of their prevailing maturity; but a
however deep the friendship is with the fools, it will most likely bring ill
and in any case is useless also.
Both
NalaDiyAr and PerungaDai have verses that exactly reflect the same thought.
“It is better to have the bitter enemity of
learned
than to
have deep friendship of fools so branded”
இன்றெனது குறள்:
அறிவுடையார் தம்பகை
பன்மடங்கு மேலாம்
அறிவிலார் ஆழ்ந்தநட்பி
லும்
aRivuDaiyAr
thampagai panmaDangu mElAm
aRivilAr
AzhndanaTp lum
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam