ஜூலை 22, 2014

குறளின் குரல் - 824

22nd Jul 2014

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
                        (குறள் 818: தீநட்பு அதிகாரம்)

ஒல்லும் - தம்மால் இயன்ற
கருமம் - செயலையும் (உதவியையும்)
உடற்றுபவர் - முடியாதது போல் காட்டி செய்யாமல் விடுபவருடைய
கேண்மை - நட்பு
சொல்லாடார் - அவரிடம் சொல்லாமலேயே
சோர விடல் - கைகழுவி விட்டுவிடவேண்டும்

இக்குறள் சொல்லும் கருத்து, போலி நண்பர்களை நம்பி மோசம் போவதிலும், அத்தகைய நண்பர்களை கொள்ளாமல் இருப்பதே நன்று என்பதேயாம். தம்மால் இயன்ற உதவியைக்கூட செய்ய முடியாதது போல் காட்டி செய்யாமலே இருப்பவருடைய நட்பினை, அவரிடம்கூட சொல்லாமலேயே கைகழுவி விடுதலே நன்று.

Transliteration:

Ollum karumam uDaRRu bavarkENmai
sollADAr sOra viDal

Ollum – What he is able to do
karumam – even those deeds of help
uDaRRubavar – showing as if they cannot be done, not doing them
kENmai – their friendship
sollADAr – without even telling them
sOra viDal – let go

This verse cautions about having bogus friends who will not be helpful when needed. When a person is able to do deeds that can help, but he acts as if he is not able to do, it is better to let go such friendship, even without telling the erstwhile friend.

“Let go of a bogus friendship that dodges helping
 even when is able to, without them ever knowing”


இன்றெனது குறள்:

தம்மால் இயன்றும் உதவாதோர் நட்புவெறும்
சும்மாவாம் சொல்லாது தள்ளு

thammAl iyanRum udavAdOr naTpuveRum
summAvAm sollAdu thaLLu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...