ஜூலை 16, 2014

குறளின் குரல் - 818

16th Jul 2014

உறின்நட்டு அறின்ரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
                        (குறள் 812: தீநட்பு அதிகாரம்)

உறின் நட்டு  - கொண்ட நட்பால் பயனை எதிர்பார்த்து நட்பு கொண்டு
அறின் ரூஉம் - அப்பயன் கிட்டாது அறுமாயின், நீங்கிச் செல்லும்
ஒப்பிலார் - ஒவ்வாத பண்புடையோர்
கேண்மை - நட்பைப்
பெறினும் - அடைந்தாலும்
இழப்பினும் என்? - இழந்தாலும் அதனால் என்ன இழப்பு? (ஒன்றுமில்லை என்பதாம்)

பயன் ஒன்றையே நோக்கி, அது இருக்கும் போது நட்புறவிலும், அப்பயனில்லாது ஒழியும்போது நட்பை நீங்கிச் செல்லும் நட்பென்பதற்கு ஒவ்வாத பண்புடையோர் நட்பை பெற்றால் என்ன? இழந்தால் என்ன? அதனால் ஒரு பயனும் இல்லை. குறள் இவ்வாறு சொன்னாலும் நல்ல நட்பை நாடுவதிலும், அதன் உறுபயன் நோக்கிச் செய்யவேண்டும் என்று நாலடியார் பாடலொன்று கூறுகிறது. இது கூறும் கருத்து, மிகவும் வெண்மையான அருவிகளைக் கொண்ட மலை நாட்டு வேந்தனே! உயர்ந்தோர் நட்பு மேலான சிறப்புடையதாய் மழைபோலும் சிறந்த பயனுள்ளதாகும். நற்குணமில்லாதார் நட்பு மிகுந்தால், மழை பெய்யாமல் வறண்ட காலத்தை ஒக்கும். மழை இல்லாததால் வளம் குறைதலோடு வெயிலும் சுட்டெரிப்பதுபோல, கூடா நட்பால் நன்மையின்றித் தீமை நேரும் என்பது கருத்து. நட்பு கொள்ளும்போது உயர்ந்தோர் நட்பைக் கொள்ளவேண்டும். அது பயன் தரும். நற்குணமில்லார் நட்பு பயனற்றது. அதைத் தள்ளுதலே நன்று. உள்ளார்ந்து நோக்கின் இப்பாடல் குறளின் கருத்துக்கு முறணாகச் சொல்லவில்லையென்பது விளங்கும். அப்பாடல்:

சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்றாய்
மாரிபோல் மாண்ட பயத்ததாம் - மாரி
வறத்தக்கால் போலுமே வாலருவி நாட!
சிறந்தக்கால் சீரிலார் நட்பு.

Transliteration:

uRinnaTTu aRinorUum oppilAr kENmai
perineum izappinum en?

uRin naTTu – Having friendship, expecting benefits
aRin orUum – when such benefits are not there, leaving friendship
oppilAr – such characterless, undesirable person’s
kENmai - friendship
perineum – what if we get that?
izappinum en? – or lose it?

What if the friendship is there or not, with characterless, undesirable person who is in friendship only expecting some benefit and relinquishing it when there is none anymore. Such opportunistic friendships are better not to have, is what is implied in this verse. A nAlaDiyAr poem says, it is like useful showers to have friendship with elevated, virtuous souls. To have friendship with characterless, bad persons is like having draught that not only diminishes the yiled, but is scorching bad. Though this poem seems to say something contrary to what the kuRaL verse says, it only implies that when you seek friendship seek that of virtuous, elevated souls.

“What use is it to have or not a friendship that is only opportunistic,
 seeking benefit to stay, but when none to reap from, does not stick?”

இன்றெனது குறள்:

பயனிருப்பின் கொண்டின்றின் நீங்குமொவ்வார் நட்பு
நயந்தென் நயவாக்கால் என்?

Payaniruppin koNDinRin nIngumovvAr naTpu

nayanden nayavAkkAl en?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...