17th Jul 2014
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
(குறள் 813: தீநட்பு அதிகாரம்)
உறுவது - இந்த நட்பினால், நண்பரால்
நமக்கு இன்ன ஆதாயங்கள் உண்டென்று
சீர்தூக்கும் - நட்பினால்
பெறும் பயனைமட்டும் கருத்தில் கொண்டு
நட்பும் - நட்பு கொள்வோரும்
பெறுவது - உறவைக் கொள்ளாது உடலை
விற்று பெறும் பொருளைமட்டும்
கொள்வாரும் - கொள்ளும்
பொது மகளிரும் (இருபாலரிலும் பொது மக்கள் உண்டு)
கள்வரும் - பிறர்
பொருளைக் கவர்ந்து செல்லும் கள்வ கயவர்களும்
நேர் - ஒருவருக்கொருவர்
ஒப்பாவர்
ஒரு நண்பரால் இன்ன ஆதாயங்கள்
உண்டென்று கணித்து அதன் காரணமாக மட்டும் நட்பு கொள்ளுவோரும், உறவினால் மனிதரை அறியாது,
அவர் தரும் பொருளினால் உறவை வழங்கும் பொது மகளிரும், பிறர் பொருளைக் கவர்ந்து செல்லும்
கள்வக் கயவர்களும் ஒருவருக்கொருவர் ஒப்பாகும். பெறுவது கொள்வாரும் என்பதைப் பொதுமகளிர்
என்று பொருள் செய்திருந்தாலும், பணத்துக்காக உடலை விற்பதென்பது இருபாலருக்கும் பொதுவான
ஒன்றாகிவிட்டது.
தீய நட்பைக் கூறும் அறநெறிச்சாரப்
பாடல், வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, உள்ள செல்வத்தைக் கவர்ந்து பின் நீங்குபவர்களை
திருடர், தீய நட்பென்றும் கூறுகிறது. சோர்வுற்ற
வழியும் எடுத்த வினையை முடிக்குமாறு செய்கின்றவர்கள், தாயை நிகர்வர் பெரியோர்களுக்கு.
கேட்போர் மனமுருகுமாறு, வாயளவில் பணிவுடையராகச் சொல்லி, உள்ள செல்வத்தைக் கவர்ந்து
பின் நீங்குகின்றவர்கள், திருடரை நிகர்வர், என்பது இப்பாடலின் கருத்து. இப்பாடல்.
காய உரைத்துக்
கருமஞ் சிதையாதார்
தாயரோ டொவ்வாரோ
தக்கார்க்கு-வாய்பணிந்து
உள்ள முருக
உரைத்துப் பொருள்கொள்வார்
கள்ளரோ டொவ்வாரோ தாம்.
Transliteration:
uRuvadu sIrthUkkum naTpum peRuvadu
koLvArum kaLvarum nEr
uRuvadu – thinking that this friendship brings these
benefits
sIrthUkkum – and only considering such benefits
naTpum – that who is in friendship
peRuvadu – not looking at the person, but the money he
brings
koLvArum – and takes that in barter to companionship
kaLvarum – those who steal others possessions
nEr – they are all equal.
Just looking at the
benefits in a friendship that who makes friends, a person that offers sexual
favor in barter, not looking for real relationship, a thief that steals others
belongings, are all just the same in nature. The lowly comparison of
prostitues, and the thieves is made to highlight the lowly nature of evil
friendship. Though the prostitution is common to both gender, the old school
thought has always pinned it to female gender, which is no more true.
An aRaneRi chAram
poem also says that those, being outwardly submissive, but inside scheming to
covet others belongings, are not friends, but thieves.
They are one and the same - opportunistic friend,
that who barters
sexual favors for money and a thief that
covets belonging of others
இன்றெனது குறள்:
பயன்நோக்கி கொள்நட்பும் வேசையரும் கள்வக்
கயவோரும் ஒப்பினொன்றே யாம்
payannOkki koLnaTpum vEsaiyarum kaLvak
kayavOrum oppinonRE yAm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam